இதழ் 50

மூச்சுக் குழாய் ஆஸ்த்துமா (Bronchial Asthma)

ஆஸ்த்துமாவானது மூச்சு குழாய்களில் ஏற்படும் தற்காலிக சுருக்கத்தினால் ஏற்படுகிறது.

இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

  • பரம்பரை
  • அழற்சி நோய்கள் (Allergic rhinitis, atopic dermatitis)

நோயை தூண்டும் காரணிகள்

  • மாலை அல்லது அதிகாலை நேரங்கள்
  • பனிக்காலம் போன்ற காலநிலை மாற்றங்கள்.
  • வைரஸ் தொற்றுக்கள்
  • குளிர்பானங்கள்
  • உடற்பயிற்சி
SanyaSM/Getty Images

வைத்தியசாலைக்கு சென்று மருந்துகள் எடுத்து ஆவி பிடிக்கும் போது (nebulization) குணமாகிறது.

மூச்சு குழாய்களில் ஏற்படும் சுருக்கம் தற்காலிகமானது என்பதே இதற்குக் காரணமாகும்.

எனினும் இந்நோயானது அடிக்கடி வரும் போது சிக்கல் நிலைகளைத் தோற்றுவிக்கிறது.

பிள்ளைகளின் தூக்கம், கற்றல் மற்றும் விளையாட்டு செயற்பாடுகளை குழப்புகிறது.

குணங்குறிகள் (Clinical features)

1. அடிக்கடி இருமல் – பெரும்பாலும் பின்னேரம் மற்றும் அதிகாலை வேளையில் அதிகம் ஏற்படும்.

2. இருமலுடன் மற்றும் இழுப்பும் (Wheezing) காணப்படும்.

3. மூச்சுஎடுக்க சிரமம்

சிகிச்சை முறைகள் (Management )

எத்தகைய சந்தர்ப்பங்களில நோயை நிரந்தரமாக தடுப்பதற்கான மருந்துகள்  பாவிக்க வேண்டும் …??

1. மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ஆஸ்துமாவுக்கு மருந்து எடுக்க அல்லது ஆவி பிடிக்க வேண்டி ஏற்பட்டால்

2. எப்போதாவது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால்

3. சிறுவர்கள் ஓடி விளையாடும் போது மூச்சு இளைப்பு ஏற்படுமாயின்

4. இரவு மற்றும் அதிகாலை வேளையில் மூச்சு இளைப்பு அல்லது இருமல் தொடர்ச்சியாக ஏற்படுவதுடன்  இக் குணங்குறிகள் பகல் வேளையில் இல்லாமல் போகும் சந்தர்ப்பத்திலும

5. அடிக்கடி ஆஸ்துமா ஏற்படாமல் சில மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வந்தாலும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடுமையான மூச்சு இளைப்பு ஏற்படுவதுடன் வைத்திய சாலை தொலைவில் இருந்து உடனடியாக வைத்திய சாலை செல்ல முடியாத சந்தர்ப்பங்கள் இருக்குமாயின்

ஆஸ்த்துமா நோயின் நிரந்தர சிகிச்சை முறை என்ன ??

  • ஆஸ்த்துமாவிற்கான நிரந்தர சிகிச்சை “பம்” என்று சொல்லப்படும் (inhaler) பாவிப்பதே ஆகும். 
  • குளிசைகளை விட inhaler க்கு பக்கவிளைவுகள் மிகக்குறைவு
  • Inhaler பாவிக்கும் போது உங்கள் அன்றாட வாழ்க்கை ஏனையவர்களைப் போல சாதாரணமாக இருக்கும்.
  • எவ்வகையான சாப்பாடுகளையும் சாப்பிடலாம். எவ்வகையான காலநிலைகளிலும் சென்று வரலாம்.

Inhalers இன் வகைகள்

இரண்டு வகையான Inhalers உண்டு.

  1. முதலாவது, ஆஸ்துமா அறிகுறிகள் ஏற்படும் போது மாத்திரம் பாவிப்பது ஆகும். Salbutamol (asthalin) என்ற நீல நிற inhaler
  • குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் போது இழுவை ஏற்பட்டால் உடனடியாக இந்த நீல பம் ஐ பாவித்தால் இழுவை கட்டுப்பாட்டுக்கு வரும்.
  • ஆரம்பத்தில் அடிக்கடி பாவிக்க நேரிடலாம். எனினும் காலப்போக்கில் பாவிக்கும் அளவைக் குறைத்து கொண்டு சென்று நிறுத்த முடியும்.
  • . இரண்டாவது, நிரந்தரமாக பாவிப்பது. இதை காலையும் மாலையும் தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும். இதில் பல வகை உண்டு. Beclate, Foracort, seroflo போன்றவை ஆகும்.

Inhalers பாவிப்பது எப்படி ??

பொதுவாக சிறுவர்களுக்கு inhaler இனை நேரடியாக வாயில் வைத்து பாவிப்பது இல்லை.

மாறாக ஸ்பேசர் எனப்படும் (spacer ) பிளாத்திக் குடுவையில் பம் ஐ  இணைத்தே பாவிக்க வேண்டும். இவ்வாறு பாவிக்கும் போது வினைத்திறன் அதிகம் ஆகும்.

Related posts

வர்ணப் படைப்புகளின் சங்கமம் துமி!

Thumi202121

இலக்கங்ளை அடைகிறோம்! இலக்குகளை அடைவோம்!

Thumi202121

அகரம் இட்ட துமி

Thumi202121

Leave a Comment