இலத்திரனியல் தமிழேடுகள் பலவற்றினை நாம் இப்போது தரிசிக்கின்றோம். நவீனத்துவ
தொழினுட்பங்களைப் பயன்படுத்தி நமது இளைஞர்கள் அறிவியல் சார்ந்த விடயங்களை ஆக்கபூர்வமாக செய்து வருகின்றனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்று பின் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்த சில மாணவர்கள் ஒன்று கூடி ‘துமி” என்ற பெயரில் இணையத்தள ஏட்டை மாதந்தோறும் தவறாது வெளியிட்டு வருகிறார்கள்.
அருமையான விடயங்களைத் தாங்கி துமி பத்திரிகை வாசகர்களின் அகத்தில் இடம்பிடித்துள்ளமையை யாவரும் ஒப்புக்கொள்வர். துமி இணையதளப் பத்திரிகையின் ஐம்பதாவது சிறப்பிதழ் வெளிவருவது அறிந்து மிகவும் ஆனந்தம் அடைகிறேன். துமி இணையதளப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர், வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இந்த மாநிலம் பயனுற வாழவேண்டும்” என்ற மகாகவி பாரதியின் வரிகளை உள்வாங்கி துமி அமைப்பினர் அருமையான காரியங்களைச் செய்து வருகின்றனர். துமி பத்திரிகை அரிய விடயதானங்களை உள்ளடக்கி வெளிவருகிறது. ஆத்மீகம் அறிவியல் இலக்கியம் சமகாலச் சூழ்நிலை விளையாட்டு என பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி காலம் தவறாது வெளிவருகிறது. தங்களுக்குள்;ள வேலைகளுக்கு மத்;தியிலும் சமூக உணர்வோடு செயற்படுகின்ற துமி அமைப்பினர் ஓர் புதிய அனுபவத்;தைப் பெற்றுள்ளனர். பத்திரிகையின்; ஆரம்பத்தை விட தற்போது ஓர் அனுபவமுதிர்ச்;சி அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. பத்திரிகை கனதியான விடயதானங்களோடு வெளிவருகிறது. ஆசிரியர் கருத்து மிகவும் ஆழமான செய்தியை வெளிப்படுத்த தவறுவதில்லை. இந்நிலையில் துமியின் எதிர்காலம் நன்கு புலப்படுகிறது.
தொடர்ந்து துமி, சமூகத்தின் ஆர்வத்தை தூண்டும் என்பதில் ஐயமில்லை. துமி அமைப்பினர் கடும் பொருளாதார பிரச்சினை காலத்தில் வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களை கையளித்து தம் பணியை விரிவாக்கிக் கொண்டனர். எனவே துமியின் சமூகச் சிந்தனை
பாராட்டுக்குரியது. மேலும் துமியின் பணிகள் விரிவடைய பிரார்த்தித்து அமைகிறேன்.