இதழ் 50

துமியின் வெள்ளம்
மடை திறந்து ஓடட்டும்

வணக்கம், அன்பிற்குரிய துமி மின்னிதழ் வாசகர்களே!

மிகவும் கனிசமான அளவிலே ஈழத்திலிருந்து இலக்கிய இதழ்கள் வெளியாகிவருகின்றமை என்பது கவலைக்கிடமான விடயமாகும். எத்தனோயோ இதழ்கள் அரசல் புரசலாக ஆரம்பிக்கப்பட்டாலும் தொடர்ந்து பயணிப்பதும் இல்லை. ஏதோ ஒரு காரணங்களில் முடங்கி விடுகிறது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் துமி மின்னிதழ் தனது 50 ஆவது இதழை தொட்டு விட்டது.

இதன் பயணம் மிகவும் காத்திரமானது. வளர்ந்து வருகின்ற இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துத் தருவதில் முக்கிய பங்காளனாகவும் திகழ்கின்றது. என்னுடைய பல படைப்புக்களுக்கு களமமைத்துத் தந்த முக்கிய இதழும் இதுவாகும். என்னை போல பல படைப்பாளிகளுக்கு துமி மழைச் சாரல் தான்.

துமி மின்னிதழ் இன்னும் நிறைய பயணிக்க வேண்டும் இந்தச் சேவை தமிழிலக்கிய உலகில் ஒப்பற்றது. தொடர்ந்து பலரின் இளைப்பாறும் இடமாக திகழ பேரன்பும் வாழ்த்துக்களும்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 45

Thumi202121

துமியை எவரும் கணக்கெடுப்பதில்லை ?

Thumi202121

5000 காண வேண்டும்!

Thumi202121

Leave a Comment