துமி அமையம் சமூகத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்கள் தொடர்பில் தனது பேஸ்புக்(Facebook) தளத்தில், கேள்வியையும் விடைகளையும் பகிருவதன் மூலம் மக்கள் எண்ணங்களை அறிந்து, அதனை மின்னிதழூடாக சமூகத்திற்கு விடுவதனால் பொது அபிப்பிராயத்தை மக்களிடம் உருவாக்கும் ஊடகத்தின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற அடியெடுத்து வைக்கிறது மின்னிதழ் ஐம்பதில்!
கேள்வி 1:
தற்போது யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இறுதி இல்ககத்துடனான கிராம சேவகர் பதிவு அட்டை நடைமுறையை;
ஆதரிக்கிறேன் – 63%
எதிர்க்கிறேன் – 22%
இறுதி இலக்கதத்துடனான QR code – 13%
சமகாலத்தில் இலங்கை மக்களின் அரசியல் பொருளாதார நெருக்கடி என்பது எரிபொருள் பிரச்சினையுடன் குறுகிய பார்வைக்குள்ளே நகர்த்தப்பட்டுள்ளது.குறிப்பாக, எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வாக வாரந்தோறும் ஒவ்வொரு புதிய நடைமுறைகளை அறிவிப்பதனூடாக மக்களிடம் அவை தொடர்பான உரையாடலை ஏற்பத்தி, அரசாங்கம் தனது தீர்வற்ற நிலையையே மறைக்க முயலுகின்றது.
தற்போது எரிபொருள் விநியோகத்தில் நாடு முழுமையாக விநியோக செயன்முறைகளே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்றது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் நிலையையே எமது கேள்வி மற்றும் பதில்கள் வெளிப்படுத்தி உள்ளது. யாழ் மாவட்ட செயலகம், பதிவு அட்டையை அறிமுகப்படுத்தி மக்கள் தமது பதிவுகளை மேற்கொள்ளும் சமகாலப்பகுதியில் அரசாங்கம் தேசியரீதியாக QR Code நடைமுறையை அறிவித்திருந்தது.
மக்கள் இரு அறிவிப்புக்களாலும் பெருங்குழப்பத்தையே எதிர்கொண்டிருந்தனர். இச்சூழலில் மக்கள் யாழ் மாவட்ட செயலகம் முதலில் அறிவித்த நடைமுறையை செயற்படுத்துதுவதற்கான அறிவிப்பையே சனநாயகத்தில் பதிலாக வழங்கியுள்ளார்கள். எனினும் இவ்இதழ் வாசகர்களை சென்றடையும் காலத்தில் எரிபொருள் விநியோக நடைமுறை முழுமையாக QR Codeக்கே நகர்ந்துள்ளது. இந்நடைமுறையும் சனநாயத்தின் பதிலும் வெளிப்படுத்துவது, மக்களுக்கான அரசாங்க தீர்மானங்கள் மக்கள் மனமறியாத அதிகாரிகளின் விருப்பங்களாகவே காணப்படுகிறது.