இதழ் 50

துமியை எவரும் கணக்கெடுப்பதில்லை ?

துமிகளால் எவருக்கும் எந்தப்பயனுமில்லை.
துமித்த ஒரு விந்து முந்தியிராவிட்டால் நீயே இல்லை.

துமி எவர் தாகத்தையும் தணிப்பதில்லை
துமிகள் சேராமல் தாகம் தணிவதும் இல்லை

துமி குருதி சிகிச்சைக்கு போதுவதில்லை.
துமித்துமியாய் குருதி சேராவிட்டால் சிகிச்சையே இல்லை.

துமி மழையால் மண் நனைவதில்லை
துமித்துக்கொண்டே இருந்தால் மண் குளிராமலில்லை.

துமியை சமுத்திரத்தில் கண்டுபிடித்திட முடிவதில்லை.
விட்ட மூச்சுக்காற்றை பிடித்து ஆதாரம் காட்டியவர் எவரும் இல்லை

துமியின் சக்திக்கு சான்று இல்லை.
துமி விசத்தால் முடியாத காரியம் இல்லை.

துமியை எவரும் கணக்கெடுப்பதில்லையா?
துமி இல்லாத கணக்கேயில்லை!!

Related posts

அகரம் இட்ட துமி

Thumi202121

துமியின் வாசகி

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 45

Thumi202121

1 comment

Leave a Comment