உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா சுமார் 170 கிலோமீட்டர் தூரத்திற்கு ‘The line’ என்ற திட்டத்தின் பெயரில் ஒரு பிரமாண்ட நகரத்தை உருவாக்கி வருகிறது.
சவுதி அரேபியாவின் எதிர்கால பொருளாதாரத்தையும் சுற்றுச் சூழலையும் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கிட்டத்தட்ட 500மில்லியன் அமெரிக்கா டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்த நகரத்திற்கு ‘NEOM’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ‘The line’ திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் 2030-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இதன் கட்டுமானங்கள் வழக்கமாகக் கிடைமட்டமாகக் கட்டப்படும் கட்டுமானமாக இல்லாமல் செங்குத்தான அடுக்குகள் கொண்ட கட்டுமானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது மேல் அடுக்கில் மக்கள் நடந்து செல்வதற்கான சாலைகள், பூங்காக்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள். அதற்குக் கீழ் அடுக்கில் பள்ளிகள், காலேஜ் மற்றும் ஐடி போன்ற வணிக வளாகங்கள். அதற்கும் கீழே கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் 170 கிலோமீட்டரைக் கடக்கும் வகையில் அதிவேக ரயில்களுடன் கூடிய போக்குவரத்துச் சேவைகள் என சுமார் 9 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த ‘NEOM’ நகரம் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உலகிலேயே நீண்ட நாள்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றால் அது ஜப்பானியர்கள் தான். இந்த மக்களுக்காக பிளைவுட் சப்ளை நிறுவனமான கோயோஜு (koyoju) நிறுவனமும், இடோகி(itoki) என்ற பர்னிச்சர் கடையும் சேர்ந்து நேப் பாக்ஸ் (Nap box) என்ற ஒரு சாதனத்தைத் தயாரித்திருக்கின்றன. இதனுடைய ஸ்பெஷல், ஒருவர் நின்றபடியே தூங்கிக்கொள்ளலாம். எதற்கு அந்த நிறுவனம் இப்படி ஒரு கண்டுப்பிடிப்பைக் கண்டுபிடித்திருக்கிறது என்றால், பணி நேரத்தின்போது மனிதர்களுக்கு அவ்வப்போது தூக்கம் வருவது என்பது இயல்பான ஒன்றுதான்.
ஆனால் சிலர் அந்தத் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். கடுமையான வேலைப்பளுவுக்கு இடையே ஒரு நபர் சரியாக 22 நிமிடங்கள் தூங்கினால், அதன் பின்னர் அவர் செய்யக்கூடிய வேலையில் ஆற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் பணியாளர்கள், பணி நேரத்தில் தூக்கம் வந்தால் நின்றுகொண்டே தூங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த நேப் பாக்ஸ்.
இதுதொடர்பாக இடோகி நிறுவனத்தின் இயக்குநர் சீகோ கவாஷிமா பேசுகையில் (Seiko Kawashima) “ஜப்பானில் நீண்ட நேரம் பணிபுரியும் பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் அவ்வப்போது கழிவறைகளில் குட்டித் தூக்கம் போட்டுவிட்டுத் திரும்பும் பழக்கம் உண்டு. அது ஆரோக்கியமானது அல்ல என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலாகத்தான் இந்த நேப் பாக்ஸைக் கண்டுபிடித்திருக்கிறோம். இதனை ஊழியர்கள் சௌகரியமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
செங்கடலில் மியாமி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பகுதி ஒன்றை ஆய்வு மூலம் கண்டுபிடித்திருக்கின்றனர். கடலின் பிற பகுதிகளில் உள்ள உப்பின் அளவை விட 3 முதல் 8 மடங்கு இந்தப் பகுதியில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இந்தப் பகுதி முழுவதும் ஹைட்ரஜன் சல்பைட் என்ற விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும், இந்த பகுதிக்குள் மீன்கள் உட்பட உயிருடன் செல்லும் எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் நீரில் விஷத்தன்மை கொண்ட கொடிய வேதிப்பொருள் கலந்துள்ளதால் அங்கு நுழையும் உயிரினங்கள் நிச்சயம் உயிரிழந்துவிடும் அல்லது அங்கு நுழையும் உயிரினங்கள் உடனடியாக மயக்கமடைந்து பின் உயிரிழக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிஇந்நிலையில், கடும் வெப்ப நிலை காரணமாக நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் உருகும் பல படங்கள் கவலையைத் ஏற்படுத்தி இருக்கின்றன. இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் உருகிய ரயில்வே சிக்னலின் புகைப்படம் ஒன்றை அந்நாட்டின் நெட்வொர்க் ரயில்வே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
வெப்பநிலை 40 செல்சியஸ்க்கு மேல் பதிவானதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தீவிர காலநிலை மாற்றம் காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.