இதழ் 51

வினோத உலகம் – 16

உயிரிழந்தவர்களின் குரலில் பேசும் `Alexa’; அமேசானின் புதிய அப்டேட்

அமேசானின் கேட்ஜெட்டான அலெக்ஸா இன்டர்நெட் வசதியுடன் இயங்கும் ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர். இது நம் கட்டளைகளை உள்வாங்கி அதற்கு இன்டர்நெட் உதவியுடன் பதிலளிக்கும். மேலும் இது அல்காரிதம் செய்யப்பட்ட ஆண் – பெண் இரு குரல்களில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பேசும் திறனைக் கொண்டது. இதைப் பயன்படுத்தி நம் சந்தேகங்களைக் கேட்டறிவது, பாடல்களை பிளே செய்வது எனப் பல்வேறு செயல்களைச் செய்ய முடியும்.

இப்படிப் பல வசதிகள் கொண்ட இந்த அலெக்ஸா சாதனத்தை இன்னும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது அமேசான் நிறுவனம். அதில் குறிப்பாக உயிரிழந்தவர்களின் குரல் போல் மிமிக் செய்து பேசும் புதிய வசதியைக் கொண்டுவருகிறது. இதன் மூலம் நாம் விரும்புவோரின் குரல்களை அலெக்ஸாவில் செட் செய்துவிட்டால் போதும், அது அவர்களின் குரலில் அனைத்து வார்த்தைகளையும் பேசும் திறனைத் தன்னிச்சையாக வளர்த்துக் கொள்ளும். இதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘டாஸ்மேனியன் புலி’

ஆஸ்திரேலியாவின் ‘டாஸ்மேனியன் புலி’ உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையும் படியுங்கள்: சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் நியாயமற்றது – இம்ரான்கான் கண்டனம் டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, “இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம். பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இங்கிலாந்தில் வரலாறு காணாத வறட்சி – வறண்டு போன தேம்ஸ் நதி

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட தொடங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. 1935-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் எரிந்து சேதம்

சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் 960-ம் ஆண்டு முதல் 1127-ம் ஆண்டு வரை சாங் வம்சம் ஆட்சி செய்தது. அந்த காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று எழுப்பப்பட்டது. இது 98.3 மீட்டர் நீளம் கொண்டது.

இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் முதல் 20 நிமிடத்திலேயே மரப்பாலம் எரிந்து கீழே விழத் தொடங்கியது. நீண்ட வளைவுகளை கொண்ட இந்த பாலம் இயற்கை பேரிடர் காரணமாக எரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

வனான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாலங்கள் கற்களால் கட்டப்படும். கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இந்த பாலத்தை மரத்தின் மூலம் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்திருந்தனர்.

Related posts

சித்திராங்கதா – 49

Thumi202121

நீங்க நல்லவரா? கெட்டவரா? Mr. செலன்ஸ்கி

Thumi202121

2022 இல் ஆன்மீகம்

Thumi202121

Leave a Comment