இதழ் 51

ஈழச்சூழலியல்

நீர்நிலைகளை திருத்தல்

குறைந்த ஒட்சிசன் நிர் நிலைகளில் காணப்படுவதால் குளத்தின் அடியில் படிந்துள்ள படிவுகளிலிருந்து போசனைப்பதார்த்தங்கள் வெளியேற்றப்படுவதனால் வெளியிலிருந்து வரும் போசணைகளைக் குறைத்தாலும் பல மீள்சீர்திருத்தும் நடவடிக்கைகள் நிறைந்த பலனைக் கொடுக்கவில்லை. உள் படிவுகளிலிருந்து வெளிவரும் பொசுபரசு வருடாந்த ரீதியாக வெளியே இருந்து வரும்  பொஸ்பரசையை விட 90%அதிகமானதாகும். இத்தகைய நிலைகளில் படிவுகளை அகற்றலே பொருத்தமான தீர்வாகும். 1999 இல் கண்டிக் குளம் வெகுவாக மாசடைந்தது. அதன் நீர் மங்கலாகவும் மேற்பரப்பில் அல்காக்களும் காணப்பட்டன. குளத்திலிருந்து அழுகிய மணமும் வீசியது. மீன்கள் அதிகம் பாதிக்கப்பட்டதுடன் பறவைகளும் அங்கு காணப்படவில்லை, பக்டீரியாக்கள் நிரில் காணப்பட்டன. இந்த நிலைக்குக் காரணம் அருகிலுள்ள தொழிற்சாலைளில் இருந்து விடுவிக்கப்படும் தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் கொண்ட கழிவு நீராகும். அத்துடன் விலங்குக் கழிவுகள் மற்றும் நிலத்துடன் சேர்க்கப்பட்ட தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்களை மழைநீர்கழுவிக் கொண்டு குளத்தில் சென்றடைவது இன்னொரு காரணமாகும்.

இக்குளத்தின் சீர் திருத்த நடவடிக்கைகள் 2003 இல் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமையில் கண்டி நகர உல்லாசப் பயண விடுதிகளின் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது. தேவையான நிதியும், விஞ்ஞான ரீதியான ஒத்துழைப்பும் கிடைத்தன. இதன் போது குளத்தைத் தோண்டி படிவுகளை அகற்றுவதிலும், தொழிற்சாலைகளில், உல்லாச விடுதிகளில் இருந்து வரும் கழிவுகளில் காணப்படும் குளத்தை மாசுபடுத்தும் பதார்த்தங்களின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் 38 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டன. 2008 ம் ஆண்டில் குளத்தின் நீர் தெளிவாகவும், அல்காக்கள் குறைந்தும், மீன்கள் பெருகி, பறவைகளின் வருகையும் காணப்பட்டன.

நோர்வேயில் காணப்படும் பெரிய எம்ஜேஸா ஆதழளய குளம் 1970 இல் நற்போசனைக்குள்ளானது. 1975 இலி சையனோபக்ட்றீரியா, ஒஸ்சிலோடாரியா கணிசமாக அதிகரித்து குளத்தின் நீர் விரும்பத்தகாத மணத்தையும், சுவையையும் கொடுத்து இக்குளத்தின் மீள் திருத்தத்துக்கான தேவையை ஏற்படுத்தியது. எனவே தகவல்கள் திரட்டப்பட்டு நீர் மாசுபடலுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. நகரத்திலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும், விவசாய நடவடிக்கைகளிலிருந்தும், காட்டு மற்றும் ஏனைய நிலங்களிலிருந்தும் முறையே, 36% 28% 11% 22% ஆன பொசுபரசு (P) குளத்தை அடைவதாகத் தெரிய வந்தது. புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனம் 1980 இல் நிறுவப்பட்டு 90% ஆன பொசுபரசை அகற்றக் கூடியதாக இருந்தது. இதனால் 0.015 – 0.018 mg/L ஆக இருந்த பொசுபரசு 0.011 mg/L ஆக குறைவடைந்தது. அல்காக்களின் வளர்ச்சியில் சயனா பக்டீரியாக்களை விட டயட்டம்கள் கூடிய வளர்சசியைக் காட்டியது.

சுவிட்சர்லாந்தில் சுயிரிச் குளத்தில் 1950 ஆண்டளவில் பொசுபரசின் செறிவானது 0.03 mg/L யை விடக் குறைவாக இருந்தது. ஆனால் சனத்தொகை அதிகம் கொண்ட நகர பிரதேசங்களில் இருந்து கழிவு நீர் இக் குளத்தை சென்றடைந்ததால் 1965 இல் 0.09 mg/L ஆக அதிகரித்தது. கழிவுநீர் சுத்திகரிப்பு முறையில் பெரிக் அல்லது அலுமினியம் சேர்க்கப்பட்டு 85% ஆன பொசுபரசு அகற்றப்பட்டு குளத்தின் பொசுபரசு செறிவு குறைக்கப்பட்டது. இரசாயனப்படிவாக்கல் மூலம் குளத்தில் பொசுபரசை வெற்றிகரமாக குறைத்த முதற்தடவை இதுவாகும்.

1950 க்குப் பிறகு ஜப்பானில், தொழிற்சாலைகளிலிருந்து பாரமூலகங்கள் வெளியேற்றப்பட்டதாலும், உணவு மற்றும் கடதாசி தொழிற்சாலைகளிலிருந்து போசனைகள் வெளியேற்றப் பட்டதாலும் குளங்களின் நீரின் தன்மை மோசமாக மாறியது. 1990 களில் 148 குளங்களில் நடாத்தப்பட்ட ஆய்வில் 28 குளங்களில் சயனோ பற்றீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்ததை அவதானிக்க முடிந்தது.

ஜப்பானின் பெரிய குளமான பிவா குளம் கியோடோ, ஓசக்கா போன்ற நகரங்களுக்கு குடிநீரை வழங்கியது. இக்குளம் ஆரம்பத்தில் குறைவான போசனையைக் கொண்டதாகக் காணப்பட்டாலும் கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கம் என்பன மூலம் வெளியாக்கப்பட்ட போசனைகள் காரணமாக நற்போசனை நிலைக்கு மாறியது. 1977 இல் இருந்து குளத்தின் நீர் நீர்த்தாவரங்கள் காரணமாக தெளிவற்ற நிலைக்கு மாறியது. சுத்திகரிக்கப்பட்ட நீர் விரும்பத்தகாத மணத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு வருடமும் அல்காக்களின் மலர்ச்சி ஏற்பட்டது. எனவே 1980 களில் இருந்து அரசாங்கம் பிவா குளத்தின் அதி போசனையைத் தவிர்க்க ஒரு சட்டமுலத்தை நடைமுறைப்படுத்தியது. இச்சட்டம் விவசாய, கால்நடைகளிலிந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை மட்டுப்படுத்தவும், பொசுபரசு கொண்ட செயற்கைத் தூய்மையாக்கிகளை தடை செய்யவும் உதவியது. எனினும் குளத்து நீரின் பொசுபரசு,நைதரசன் இன் அளவு வெகுவாகக் குறைவடையவில்லை. அல்கா மலர்ச்சி ஏற்படும் தடவைகளின் எண்ணிக்கையும் குறைவடையவில்லை. நீரேந்தும் பரப்புகளிலிருக்கும் விவசாய பகுதிகளிலிருந்து வரும் போசனையைத் தேவையான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியாமையே இதற்குக் காரணமாகும்.

2012 இல் ஒஹியோ மாநிலத்தில் நச்சு அல்காக்கள் காணப்பட்ட காரணத்தால் உல்லாசப் பிரயாணிகளுக்கு மூடப்பட்டிருந்த Grand lake st. Marys இன் P அளவைக் குறைப்பதற்கு அலுமினியம் சல்பேற்று இடத் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் பொசுபரசு 50%த்தினால் குறைவடைந்தது. இதற்கான செலவு 8.5 மில்லியன் அமெரிக்க டொலர்கலாகும். நீரேந்தும் பகுதிகளிலிருந்த அதிக எண்ணிக்கையான விலங்குப் பண்ணைகளே இந்த பொசுபரசு அதிகரிக்கக் காரணமென அறியப்பட்டது. பயிர் மற்றும் விலங்கு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெறும் போது சூழல் பாதுகாப்பக்கான முயற்சிகளும் ஒருங்கே தொடரப்பட வேண்டும். உணவும் சுத்தமான நீரும் உயிர் வாழ அவசியமாகும்.

ஆராய்வோம் ……………..

Related posts

முந்தைய என்னவள்

Thumi202121

படைத்தல் மட்டுமல்ல வரலாறு

Thumi202121

சிக்கலில் பிக்பாஸ் தொடர்

Thumi202121

Leave a Comment