இதழ் 51

படைத்தல் மட்டுமல்ல வரலாறு

ஒரு வீட்டில் தொடங்கி ஒரு நாடு வரை அதன் ஆரம்பம் தொடங்கி இன்றுவரை அதற்கென்று ஒரு வரலாறு இருக்கும். அது சுவாரசியமாக இருக்கிறது, இல்லை என்பதை தாண்டி அதோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள், அதில் ஈடுபட்ட நபர்கள் என அவற்றுக்கென்று ஒரு வரலாறு இருக்கும்.

இந்த வரலாறுகளை ஆவணப்படுத்த இன்று பலரும் பல்வேறு வழிகளில் முயன்றுகொண்டு இருக்கிறார்கள். வரலாற்றை ஆவணப்படுத்துபவதாக கூறுபவர்கள் தமக்கு கிடைத்த தகவல்களின் உண்மைத் தன்மைகளை சிறதும் ஆராயாமல் ஆவணப்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதில் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் முக்கியமானது உண்மை வரலாற்றை மட்டும் ஆவணப்படுத்துவது.

அண்மையில் திருக்கேதீச்சர ஆவணப்பெட்டகம் என்கின்ற வரலாற்று ஆவணம் கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களால் தொகுக்கப்பட்டு ஆரம்பத்தில் கேதீச்சரத்திலும் பின்னர் நல்லூரிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டு வரலாறுகளை அதிகமாக ஆவணப்படுத்தியிருந்ததோடு அவற்றின் முக்கியத்துவத்தையும் வெளியீட்டுரையில் பேசியிருந்தார்.

பொதுவாக மன்னர் கால வரலாறுகளே வரலாறுகள் என்று ஆவணப்படுத்தப்படுகையில் சமகால வரலாறுகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் பதிகம் பாடியது பாடப்புத்தகத்தில் உள்ளது. ஆனால் கவனிப்பாரற்றுக்கிடந்த கேதீச்சரத்தை அடையாளம் காட்டி மீட்டெடுத்த நாவலர் சார்ந்த கதை இன்றைய தலைமுறைக்கு தெரியாமலே போய்விடுமென்று வெளியீட்டுரையில் ஆறு.திருமுருகன் அவர்கள் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

இந்த நிலைதான் இன்றைய சகல வரலாற்று இடங்களுக்கும் உள்ளது. இடைநிலை வரலாறுகள் மற்றும் நவீன வரலாறுகள் மிகமுக்கியமானவகையாக உள்ளபோதும் அவை கவனிப்பாரற்று காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. கேதீச்சரம் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டது போல ஏனைய மத தலங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றய இடங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இறந்தகால பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது பெருந்தவறுதான். ஆனால் வரலாற்றையே பேசாமல் விட்டால் அது மிகப்பெரும் தவறாகிப்போய் விடும்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 46

Thumi202121

வரலாறு என்ன சொல்கிறதென்றால்….

Thumi202121

2022 இல் ஆன்மீகம்

Thumi202121

Leave a Comment