சவுதி அரேபியாவின் மெதினா நகரில் பூமிக்கு அடியில் ஏராளமான தங்கம் மற்றும் தாமிரம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இது சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட நெப்டியூன் கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நெப்டியூன் கோளின் மெல்லிய வளையங்களின் விரிவான படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முதன்முறையாக படம் பிடித்துள்ளது.
1989 இல் வாயோஜர் 2 விண்கலம் நெப்டியூன் கிரகத்தை கடந்து சென்றதில் இருந்து, விரிவாக காணப்படாத அம்சங்களை இந்த தொலைநோக்கியின் அகச்சிவப்பு கருவிகள் தெளிவாக எடுத்துக்காட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இஸ்ரேலின் கரையோரத்தில் வால்நெட் மரங்களால் கட்டப்பட்ட சுமார் 25 மீட்டர் நீளமான பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் விபத்துக்கள்ளான ஒர் கப்பலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

துபாய் முழுவதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக வழங்கும் வெண்டிங் இயந்திரத்தை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. துபாயில் பணிபுரியும் அதிக வெளிநாட்டவர்கள் கட்டட வேலை, கனரக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெலிவரி ஊளியர்களாக பணியாற்றுகின்றனர். குடும்பத்துக்கு பணம் சேர்ப்பதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிடாமல் தொழில் புரிகின்றனர். இந்நிலமையை மாற்றும் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
