இதழ் 52

ஈழச்சூழலியல் 38

அல்கா மலர்ச்சி – தொடர்ச்சியான கண்கானிப்பின் அவசியம்

1960 இல் Erie குளத்தில் ஏற்பட்ட பாரிய அல்கா மலர்ச்சி நீர் விளையாட்டுக்களை நிறுத்தல், நீர் படகுப் பிரயாணங்களுக்கு இடைஞ்சல்கள், மீன்கள் இறத்தல், பல கிலோ மீட்டர் தூரம் வரையில் உணரப்பட்ட சகித்துக் கொள்ளமுடியாத துர்நாற்றம் போன்றவற்றின் காரணமாக சர்வதேச ரீதியில் பிரபல்யமானது.

தூய்மையாக்கிகள், இரசாயனப் பசளைகள், விலங்குப்பண்ணைகளின் கழிவுகள், நீரேந்தும் பகுதியிலிருந்து வரும் ஓடுநீர், அதிக எண்ணிக்கையான சிற்றருவிகள், ஓடைகளினூடாக குளத்தை அடைந்து அதிக அளவிலான பொசுபரசை குளத்தில் சேரவைத்ததே பிரதான காரணமாகும். சமூகஎதிர்ப்புகள், தூய்மையாக்கிகளில் பொசுபரசின் (P) அளவைக் குறைத்தல், அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் பொசுபரசைக் (P) கொண்ட தூய்மையாக்கிகளைத் தடை செய்தமை,

விவசாய விரிவாக்கல் சேவைகள் அதிகரிக்கப்பட்டமை, குளத்தில் பொசுபரசு சேர்வதைப் பற்றிய மக்களை அறியவைத்தல், சட்டம் மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி கண்டிப்பாக அமுல்படுத்தல் போன்றன குளத்தில் P இன் அளவினைக் குறைக்க ஏதுவானதுடன்1980 இன் நடுப்பகுதியில் அல்கா மலர்ச்சியினைக் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. எனினும் எதிர்பாராதவாறு 1990 இல் மீண்டும் இப்பிரச்சினை தலைதூக்கியது. மைக்குரோசிஸ்டின் எருகினோசா வின் மிதமிஞ்சிய மலர்ச்சி 2003 இல் அவதானிக்கப்பட்டது. 2006 இல் நச்சுப்

பதார்த்தங்களைக் கொடுக்கும் லிங்பியா வெல்லே Erie குளத்தில் பெருகியது. அமெரிக்காவும், கனடாவும் குளத்தின் சீர்திருத்தப் பணிகளைத் தொடங்கின. ஒஹியோ சூழல் பாதுகாப்பு நிறுவனத்தினால் 2007 இல் ஒஹியோ Erie குள பொசுபரசுக்கான விசேட பணிக் குழு அமைக்கப்பட்டது. 2011 இல் இன்னுமொரு விசேட குழு பெரும் குளங்களுக்கான சபையினால் அமைக்கப்பட்டது. இக்குழு அல்கா வளர்ச்சிக்கான காரணிகளை ஆழமாக ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாதிருக்க சிபாரிசுகளை முன்வைக்குமாறு வேண்டப்பட்டனர்.

அதன் போது பின்வரும் பிரதான தேர்வுகள் முன்வைக்கப்பட்டன.

A) நீரில் கரையும் பொசுபரசு P இன் அளவு 1990 இன் நடுப்பகுதியிலிருந்து 1970 ல் சுத்தம் செய்ய முன்பிருந்த மட்டத்திற்கு அதிகரித்துள்ளமை.

B) பயிர், விலங்குப் பண்ணைகள் உட்பட நகர்ப்புற மற்றும் நகரின் சுற்றுப் புற பகுதிகளில் நிலப் பயன்பாடு நடவடிக்கைகள் கணிசமான அளவில் அதிகரித்தமை.

C) காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அதிகூடிய மழைச்செறிவும் அதிகரித்த ஓடு நீரும் ஏற்பட்டமை.

D) பெரும் பண்ணை விவசாயிகளால் பொசுபரசு P இனை நிலத்தின் மேல் இடுதலும் அதனால் ஏற்பட்ட பொசுபரசு அதிகரித்த ஓடு நீரும்.

E) நீரியல் சூழல் தொகுதியில் பாதிப்பைத் தரும் அல்கா இனங்களின் பெருக்கம்.

முக்கியமான சிபாரிசுகள் பின்வருமாறு அமைந்தன

A) ஜக்கிய அமெரிக்க கனிப்பொருள் அளவையியல் நநிறுவனத்தால் Lake Erie யிலும் அதன் நீரேந்தும் பகுதிகளிலும் தொடர்ச்சியான கண்கானிப்புத் திட்டத்தை அமைத்தல்.

B) ஒரு குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில எல்லா நிலச் சொந்தக்காரர்களும் மண் பரிசோதனையை செய்யுமாறு வேண்டப்படுதல்.

C) பொசுபரசு பசளைகளை நிலத்தின் மேல் இடாது நிலத்தினுள் உடனடியாக சேர்த்து விடல்.

மனித சமூகத்தின் பொறுப்பற்ற செயல்கள், எந்தவொரு பொருளையும் கரைக்கும் வல்லமையை நீர் கொண்டுள்ளமை என்பனவற்றினால் இலட்சக் கணக்கான நீர் நிலைகள் மாசடைந்துள்ளன. நீர் மாசடைவதைத் தடுப்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள பின்வருவனவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும். நீர் மாசடைவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல், சுகாதாரம்,ஆரோக்கியம் என்பனவற்றை மேம்படுத்தல், நீர்நிலைகளிலுள்ள நீரை தொடர்சியாக கண்காணித்தல், வனங்களின் கீழுள்ள நிலப்பரப்பை அதிகரித்தல், மட்காப்பில் அதிக கவனத்தைச் செலுத்துதல், இயற்கை வடிகான்களை பாதுகாத்தல்,  நீர்நிலைகளின் பாதுகாவலர்களாக சமூக உணர்வுள்ள சமூக குழுக்களை ஊக்குவித்தலும், அதற்கான வசதிகளை வழங்குதலும், குடிமக்கள் தமது நடவடிக்கைகளின் போது சுற்றாடல் விடயங்களில் கவனம் செலுத்தவதற்கு வலியுறுத்தல்.

உலகலாவியரீதியில் நீரின் தரம் குன்றியமைக்கு வழிகோலிய காரணிகளைக் கருத்திற் கொள்ளும் போது, மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள் தெளிவாக தெரிகின்றன. உதாரணமாக பசளைகளிலிருந்து நைட்ரேட்டுகள் கொண்டு வரப்படுகின்றன, பீடைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்து பீடைநாசினகள் கொண்டு வரப்படுகின்றன, தோல் கைத்தொழிலில்லிருந்து குரோமியம் வருகின்றது, தீந்தை தயாரிப்பிலிருந்து ஈயம் வருகின்றது, வளிமண்டலம் மாசடைவதால் அமில மழை பெய்கின்றது. தூய்மையாக்கிகளிலிருந்து பொசுபரசு வருகின்றது, விவசாயத்தினால் நற்போசணை ஏற்படுகின்றது, மனித மலம் உட்பட கழிவுகளை அகற்றுவதனால் உயிரியல் மாசுக்கள் உருவாகின்றன, ஆயுத உற்பத்தி தொழிற்துறையிலிருந்து கதிர் வீச்சு பொருட்கள் வருகின்றன.

நீர்நிலையொன்றை சுத்தம் செய்வதை விட அதனை இலகுவாக மாசுபடுத்தலாம். நைட்ரேற்றுக்களின் செறிவு, பாரமான உலோகங்கள், ஏனைய பல ஆபத்தான பொருட்களை பாரம்பரியமான நீர் சுத்திகரிப்பு முறைகளின் மூலம் குறைக்கமுடியாது. மேலும், ஏரி போன்ற பெரும் நீர்நிலைகளிலிருந்து மாசுக்களை அகற்றுவதற்கு அதிக நிதி வளம் தேவையானதோடு, சுத்திகரிப்பற்கும் மிக நீண்ட நாட்களெடுக்கும். யுனான் மாகாணத்திலுள்ள டியான்சி ஏரியிலுள்ள நீரை சுத்திகரிப்பதற்கு சீனா 14 வருடங்களாக 564 மில்லியன் டாலர்களை செலவிட்டதோடு, இறுதியில் அதிக வெற்றி கிட்டவில்லை. பெருமளவான நிதி வளங்களையும், ஏனைய வளங்களையும் பயன்படுத்தி நீர்நிலையொன்றை, அது மாசடைவதற்கு முன்னிருந்த நிலைக்குக் கொண்டு வருவதே சீர்படுத்தல் (Remediation) எனப்படும். பொதுவாக பிரச்சினையை தோற்றுவிக்கும் தலைமுறை இதற்கான விலையைச் செலுத்துவதில்லை. அதற்கு அடுத்த தலைமுறையே விலையைச் செலுத்துகின்றது.

ஆராய்வோம்………………………

Related posts

தப்போவ – ஒரு அய்யனார் தேசம்

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 47

Thumi202121

முன்னுதாரணமாகும் சமுதாயச் சமயலறை

Thumi202121

2 comments

Leave a Comment