இதழ் 53

வினோத உலகம் – 18

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்துள்ளார். 

தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீரை ரூயிபோஸ் என்று அழைக்கப்படுகிறது.

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இந்த நாவல் அமைந்துள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. புக்கர் பரிசை பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது. முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தே தி கத்தாரில் தொடங்குகிறது. இந்த நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி கத்தார் அரசுக்கு சீனாஒரு ஜோடி பாண்டாக் கரடிகளை பரிசாக கொடுத்துள்ளது. அந்த பாண்டா கரடிகளுக்கு கத்தார் அரசு ராஜ மரியாதை அளித்தது. இந்த பாண்டாக்கள் சீனாவின் சுச்சுவன் மாகாணத்தில் அடர்ந்த காடுகளில் மட்டுமே இருக்கும். ஆனால் கத்தார் ஒரு பாலைவன தேசம் என்பதால் அங்கிருக்கும் தட்பவெட்ப நிலைகள் பாண்டாக்களுக்கு ஒத்துவராது. ஆனால் சீனாவின் பரிசை பெற்ற கத்தார் அரசு பாண்டாக்களுக்கு ஏற்ற மாதிரி சீனாவின் அடர்ந்த காடுகளில் நிலவும் காலநிலை இருக்குமோ அதே காலநிலையை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர். மேலும் அந்த பாண்டா கரடிகளுக்கு ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 800 கிலோகிராம் மூங்கில்களை உணவாக அளிக்க கத்தார் அரசு செய்துள்ளது. இரண்டு பாண்டா கரடிகளில் ஒன்று 4 வயது ஆன ஆண். மற்றொன்று 3 வயதான பெண் பாண்டா ஆகும். மேலும் கத்தார் நாட்டுக்கு சீனாவின் தேசிய விலங்கு பாண்டாக்கள் வருவது இதுவே முதல் முறையாகும்.

Related posts

மலையகத்தின் முகவரி தெளிவத்தை யோசப்

Thumi202121

டெனிஸ் உலகின் சக்கரவர்த்தி ரோஜர் பெடெரெர் – 02

Thumi202121

சித்திராங்கதா – 51

Thumi202121

Leave a Comment