இதழ் 54

ஈழச்சூழலியல் 40

நீர்நிலைகளில் நீரின் தரத்தைக் கண்காணித்தல்

இன்று மாசடைந்துள்ள பல நீர்நிலைகளை பல வருடங்களிற்கு முன்னரே தொடர்ச்சியாக கண்காணித்து, சரியான சந்தாப்பத்தில் அவற்றை திருத்தியிருந்தால், இன்று அவை இந்நிலையை அடைந்திராது. 1815ல் பேரை வாவி கவர்ச்சியானதொரு நீர்நிலையாகும். காலப்போக்கிலேயே அது மாசடைந்தது என்பதை நாம் ஞாபகத்திற் கொள்ள வேண்டும். 1960 களில் சில நீர்த்தேக்கங்களில் நீரின் தரம் கண்காணிக்கப்பட்ட போதிலும் கூட இலங்கையில் எந்தவொரு நீர்நிலையும் தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் கண்காணிக்கப்படவில்லை. நீர்ப்பாசன திணைக்களம் நாடெங்கிலுமுள்ள சில ஏரிகள், ஆறுகள் உள்ளடங்கலாக கண்காணிக்கும் திட்டமொன்றை ஒப்பீட்டளவில் அண்மையில் ஆரம்பித்துள்ளமை அத்திணைக்களத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு அம்சமாகும். நீரைக் கண்காணிக்கும் நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் போதும், வடிவமைக்கும் போதும், அதனை அமுல்செய்யும் போதும் நீர் பல் பாவனைகளைக் கொண்டுள்ளது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாக பராக்கிரமபாகு சமுத்திரத்தின் நீர், நீர்ப்பாசனத்திற்கும், சுத்திகரித்த பின்னர் அதனை குடிப்பதற்கும், மீன்பிடித்தலிற்கும், ஏனைய நோக்கங்களிற்கும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இந்நீர், நீர்ப்பாசனம் செய்வதற்கு உகந்ததா என மாத்திரம் கண்காணிப்பது போதுமானதல்ல. உதாரணமாக அதில் பயிர்களிற்கு சேதம் விளைவிக்கக் கூடியளவிற்கு பாரமான உலோகங்கள் காணப்படலாம், அதனால் அதனை மீன்கள் உள்ளெடுத்து, உணவுச்சங்கிலியின் ஊடாக மனிதர்களிற்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடிய செறிவில் கடத்தலாம்.

தற்போது பல நதிகளும், நீர்த்தேக்கங்களும் குடிநீரைப் பெறும் நீர் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல எதிர்காலத்தில் இதற்குப் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போதைய, எதிர்கால சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாட்டின் நீர்வளங்களின் தரத்தை திருப்திகரமாக பராமரித்தல் வேண்டும். அலுவலர்கள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், ஏனைய தேவையான வளங்கள் என்பனவற்றைக் கொண்ட முழுமையானதொரு, தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை நாடெங்கிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு வகையானோர், பல்வேறு தர நியமங்களுடன் நீரைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மண்ணிலுள்ள தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கண்காணித்தல்

அதிகமாக நைதரசன் மற்றும் பொஸ்பரசு அடங்கிய இரசாயன பசளைகளை பயன்படுத்துவதால் நீர் நிலைகளில் நற்போசணை உருவாகிறது. கமத்தொழில் திணைக்களத்தினால் சிபார்சு செய்யப்பட்ட பொஸ்பரசை விட பத்து மடங்கு, உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி, விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இது மண்ணில் பொஸ்பரசு சேருவதற்கு வழிவகுக்கிறது. மேலும் மண் அரிப்பினாலும், மண்ணின் மேற்பரப்பு கரைவதினாலும் பொஸ்பரசு நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதிகளவு பொஸ்பரசு பயன்படுத்தப்படுவது, விவசாயிகளுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதில்லை. இந்த நடவடிக்கை மூலம் குளங்களுக்கும்,நீர்த்தேக்கங்களுக்கும் பொஸ்பரசு எடுத்துச் செல்லப்படுகிறது.

இலங்கையில் பல நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் அதிகளவு பொஸ்பரசு காணப்படுகிறது. இவை hypertrophic என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2013 இல் உல்கிட்டிய மற்றும் றன்கின்ட ஆகிய நீர்த் தேக்கங்களில் அல்கா வளர்ச்சி ஏற்பட்டு, நீரை கடும் பச்சை நிறமாக மாற்றி; துர்நாற்றத்தையும் வீசச் செய்து இறுதியில் அந்நீரைக் குடிக்க முடியாத நிலமைக்குள்ளாக்கப்பட்டது. நீரில் உள்ள கரைந்த பொஸ்பரசின் அளவு ஒரு லீற்றருக்கு 560 மைக்கிரோ கிராம் ஆக இருந்தது. அதிகளவில் பொஷஸ்பரசைக் கொண்ட பல நீர்நிலைகள் உள்ளன. இங்கு எந்த நேரத்திலும் அல்கா வளர்ச்சி ஏற்படலாம். இலங்கையிலுள்ள பல நீர்த்தேக்கங்களில் அல்கா வளர்ச்சி ஏற்படின், அது தேசிய மட்டத்தில் ஒரு பேராபத்தாக முடியும். சில நாடுகளில், விவசாயிகள் சட்ட ரீதியாக தமது நிலத்தை அங்கிகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தினால் பகுப்பாய்வு செய்து விவசாயம் செய்ய முன்னர் போசணை முகாமைத்துவ திட்டம் அங்கீகரிக்கப்பட சமர்ப்பிக்கப்பட வேண்டும். இலங்கை மண்ணில் அதிகளவில் பொஸ்பரசு காணப்படுவதால் இவ்வாறான நடவடிக்ககைகள் அவசர தேவையாகும். உலகில் வேறு எங்கும் இவ்வாறான வளர்ச்சி காணப்படவில்லை. பொஸ்பரசின் அளவு அதிகமாவதனால் இங்குள்ள நீர்நிலைகளில் அல்கா உருவாகின்றன. மண்ணில் மேலதிக பொஸ்பரசு சேர்வதை தடுக்க துரித நடவடிக்ககைகள் எடுக்க வேண்டும். இது பற்றி விவசாயிகள், விவசாய ஆலோசகர்கள், நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை அறிவூட்ட நாடு பூராகவும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக்கழிவுகளைக் கண்காணித்தல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை நாட்டிலுள்ள நீர்வளங்களின் தரத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரச நியதிச் சபையாகும். எனவே இது 2002 பெப்ரவரி 2ம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு பல்வேறு வகையான தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக்கழிவுகளிற்கு பல நியமங்களை உருவாக்கியுள்ளது. எனினும், இலங்கையிலுள்ள பேரை வாவி, பொல்கொடை வாவி, வெள்ளவத்தை கால்வாய், இராஜகிரிய கால்வாய் போன்ற பெரும்பாலான நீர்நிலைகள் ஏற்கனவே மாசடைந்துள்ளன. இவற்றைக் கண்காணித்தல் மாத்திரம் போதுமானதா என்பதையும், தொழிற்சாலைகள் அதிகாரசபையின் விதிகளை பின்பற்றுகின்றனவா என்னும் வினாவையும் எழுப்பியுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அவை சென்றடையும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் அளவிற்கு செறிவானதாக இருக்காது என்பதை முழுமையாக திருப்திப்படுத்தாத தொழிற்சாலைகளை நிர்மாணிக்க அனுமதி வழங்கக் கூடாது. கழிவுகளின் தரத்தை கடுமையாகப் பரிசோதிப்பது அவசியமாகும். வருடத்திற்கொரு தடவை பரிசோரிப்பது போதுமானதல்ல. முன் அறிவிக்கப்படாது இவற்றைப் பரிசோதிப்பது அவசியமாகும்.

ஆராய்வோம்…………….

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 03

Thumi202121

வினோத உலகம் – 19

Thumi202121

உலகப் பொது மரம்

Thumi202121

Leave a Comment