இதழ் 55

களைகட்டிய கட்டார் உலகக்கிண்ணம் 2022

கால்பந்து உலக கிண்ணம் உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு விளையாட்டுத் திருவிழா. எனினும் இம்முறை கட்டாரில் இடம்பெற்ற உலக கிண்ணம் பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளின் மத்தியில் எதிர்பார்ப்பிற்கு குறைவில்லாமல் நடந்தேறியுள்ளது.

2022 FIFA உலக கிண்ணத்தை நடாத்தும் நாடாக Qatar 2010 ஆம் ஆண்டு FIFA நிறைவேற்று குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. உலக கிண்ணத்தை Qatar நடாத்தும் என முடிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 2022 Qatar உலக கிண்ணம் தொடர்பான சர்ச்சைகள் எதிர்பார்ப்புகளை மீறி உச்சம் தொட்டன. எனினும் பல காரணங்களுக்காக Qatar உலக கிண்ணம் விசேடமானது. அரபு நாடுகளில் இடம்பெறும் முதலாவது கால்பந்து உலக கிண்ணமாக இது பதிவாகியுள்ளதுடன் ஆசியாவில் இடம்பெறும் இரண்டாவது உலக கிண்ணம் இதுவாகும். கிடைக்கப்பெற்ற வாய்ப்பில் உலகை மிரள வைக்க பெருத்த பொருட் செலவில் உலக கிண்ணத்திற்கான ஆயத்தங்களை செய்தது Qatar. ஒட்டு மொத்தமாக 220 பில்லியன் இவ் உலகக்கிண்ணத்திற்கான செலவாக கணக்கிடப்பட்டுள்ளது. இது முந்தைய உலக கிண்ணத்திற்கான செலவை விட 10 மடங்கிலும் அதிகமாகும்.(2014 – 18Bn, 2018 – 14Bn)

இவ்வாறு பிரம்மாண்டமாக தயாரான உலக கிண்ணத்தின் ஆச்சர்யங்கள் தகுதிச்சுற்று ஆட்டங்களிலேயே ஆரம்பித்தது. ஐரோப்பிய தகுதி சுற்று ஆட்டங்களில் Ronaldo இன் Portugal மற்றும் 4 முறை சாம்பியன்களான Italy நேரடியாக உலக கிண்ணத்திற்கான தகுதியை இழந்து தகுதிக்காக Playoff சுற்று ஆ‌ட்டங்களுக்கு தள்ளப்பட்டன. Playoff ஆட்டங்களில் Italy உலக கிண்ணத்திற்கான வாய்ப்பை இழக்க Portugal இறுதி வாய்ப்பில் தகுதி பெற்றது. 2020 Euro கிண்ணத்தை வெற்றி கொண்டு ஐரோப்பிய சாம்பியன்களாக முடிசூடிய Italy உலக கிணத்துக்கு தகுதி பெறாது வெளியேறியது. அதே போன்று Colombia, Chile, Sweden, Peru அணிகள் உலக கிண்ணத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன. Russia தகுதி சுற்று ஆட்டங்களில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி இருந்தாலும் Ukraine மீதான போர் காரணமாக உலக கிண்ணத்தில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டது.

பலத்த போட்டிகளின் மத்தியில் Qatar மற்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 31 அணிகள் உலக கிண்ணத்தை கைப்பற்ற களமிறங்கின. எனினும் இவ்வாண்டு உலக கிண்ணத்திற்கான எதிர்பார்ப்புக்கள் இரு அணிகளை மையப்படுத்தி அதிகம் பேசப்பட்டது.

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி கால்பந்து வரலாற்றில் என்றும் அழியாமல் இடம் பிடிக்கவல்ல பொற்காலப்பகுதி. அதற்கு முதற்காரணமானவர்கள் Cristiano Ronaldo மற்றும் Lionel Messi எனும் இரு பெரும் கால்பந்து ஆளுமைகள். அனேகமாக அனைத்து சாதனைகளையும் தன்வசப்படுத்திய இவ்விரு பெரும் ஆளுமைகளுக்கும் எட்டாக்கனியாக இருந்து வந்த உலக கிண்ணத்தை கைப்பற்ற இது இருவருக்கும் இறுதி வாய்ப்பாக கருதப்பட்டது. அதற்காகவே Argentina எதிர் Portugal அணிகள் இறுதி போட்டியில் மோதுவது குறித்த எதிர்பார்ப்புக்கள் மற்றும் கணிப்புகள் கால்பந்து உலகில் நிறைந்திருந்தது.

அதற்கேற்றால் போல் Messi இன் Argentina Copa America மற்றும் Finalissma என இரு சர்வதேச கிண்ணங்களை வெற்றி கொண்டு உலக கிண்ணத்திற்காக களமிறங்கியது. மறு புறம் Portugal பலமான அணியாக களமிறங்கினாலும் உலக கிண்ணப் போட்டிகளுக்கு முன் Ronaldo வை சுற்றி அரங்கேறிய சம்பவங்கள் மற்றும் அதற்கான எதிர் வினைகள் Portugal அணியை சற்று பின்னடைவிற்குள்ளாக்கியது. சர்ச்சைகளால் சூழ்ந்திருந்த Ronaldo உலக கிண்ணம் ஆரம்பிக்க சற்று முன்னர் Manchester United கழகத்தினால் அவரது ஒப்பந்தம் முடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.

Messi Ronaldo தவிர்ந்து Luka Modric in Croatia, Belgium அணியின் Golden Generation, Neymar இன் Brazil, Superstars நிறைந்திருந்த France, Germany, Spain, England என உலக கிண்ணம் தொடர்பான எதிர்பார்ப்புப்கள் நிறைந்திருந்தது.

எனினும் பல நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் பிற காரணங்களினால் 2022 உலக கிண்ணத்தை தவறவிட்டிருந்தார்கள்.  Paul Pogba, N’Golo Kante, Timo Werner, Reece James, Sergio Ramos, Marco Reus, Sadio Mane, Nicolas Gonzalez, Karim Benzema, Gabriel Jesus என பெரும் நட்சத்திரப் பட்டாளம் உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தனர்.

குழு நிலை ஆட்டங்கள்

கோலாகலமாக November 20 ஆம் திகதி ஆரம்பித்த Qatar உலக கிண்ணம் முதல் பேட்டியிலேயே சாதனைகள் படைத்தது. முதல் முறையாக போட்டியை நடத்தும் நாடு முதல் போட்டியில் தோல்வி என்ற வரலாற்றை Qatar இடம் கையளித்தது Ecuador. முதல் போட்டியில் போட்டியை நடாத்தும் நாடான Qatar இற்கு அதிர்ச்சியுடன் ஆரம்பித்த உலக கிண்ணம் அடுத்தடுத்த போட்டிகளில் கால்பந்து ஜாம்பவான்களை கலங்கடித்தது. 35 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி பெறாமல் சாதனையுடன் களமிறங்கிய Messi யின் Argentina அணிக்கு முதல் போட்டியிலேயே அதிர்ச்சியளித்தது Saudi Arabia. எனினும் கனவுகளுடன் களமிறங்கிய Messi மற்றும் அணியினர் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று Knockout சுற்றுக்குள் நுழைந்தனர்.

குழு E இல் Japan Germany, Spain என 21 ஆம் நூற்றாண்டின் உலக கிண்ண வெற்றியாளர்களை திணறடித்து குழு E இன் வெற்றியாளர்களாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. Germany 2018 போன்று இம்முறையும் குழு ஆட்டங்களுடன் வெளியேறியது. அதே போன்று குழு F இல் Croatia, Belgium அணிகளை மீறி Morocco முதலிடம் பிடித்ததுடன் Belgium அணி குழு நிலையில் வெளியேறியது.

குழு நிலைப் போட்டிகளின் இறுதியிலும் Cameroon Brazil அணியையும் South Korea Portugal அணியையும் வீழ்த்தி அதிர்ச்சியளித்திருந்தன.

Round of 16 போட்டிகள்

குழு நிலையில் சிறப்பாக செயற்பட்டு அடுத்த சுற்றுக்கு தெரிவான 16 அணிகள் Round of 16 போட்டிகளிள் மோதின. Round of 16 ஆட்டங்களின் முடிவுகள் பெரும்பாலும் எதிர்பார்த்தது போன்றே அமைந்திருந்தாலும் Spain அணியை வீழ்த்தி Morocco அணி சாதனை படைத்தது.

காலிறுதி போட்டிகள்

காலிறுதி ஆட்டங்களிலும் Morocco அணியே பேசு பொருளாக அமைந்தது. Portugal அணியை வீழ்த்தி Ronaldo இன் உலக கிண்ண கனவை மூழ்கடித்து அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவான முதல் ஆபிரிக்க அணியாக சாதனை படைத்தது Morocco.

உலக கிண்ணத்தை வெல்வதற்கு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட Brazil அணியின் உலக கிண்ணப் பயணமும் காலிறுதியில் முடிவுக்கு வந்தது. Croatia அணியுடனான காலிறுதி போட்டியில் Penalty Shootout முறையில் தோல்வியுற்று வெளியேறியது Brazil.

மற்றைய ஆட்டங்களில் Argentina Netherlands அணியையும் France England அணியையும் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தன.

அரை இறுதி போட்டிகள்

Messi Vs Modric என ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் இடம்பெற்ற Argentina Vs Croatia ஆட்டத்தில் Croatia அணியை இலகுவில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது Argentina.

மற்றைய அரை இறுதி ஆட்டத்தில் உலக கால்பந்து ரசிகர்களின் எதிர்ப்பை மீறி Morocco அணியின் பயணத்தை அரை இறுதியுடன் முடித்து வைத்து இறுதி போட்டிக்குள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நுழைந்தது France.

அரை இறுதியில் தோல்வியுற்ற Croatia மற்றும் Morocco அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான போட்டியில் Croatia அணி வெற்றி பெற்று 3 ஆம் இடத்தை தனதாக்கியது.

Argentina Vs France இறுதி போட்டி

Messi உலக கிண்ணம் வெல்வதற்கான இறுதி வாய்ப்பில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய France அணியை எதிர்கொண்டது Argentina. மறுபுறம் நடப்பு சாம்பியன் ஆன France அணி கிண்ணத்தை தக்கவைக்கும் முனைப்பில் களமிறங்கியது.

உலகமே எதிர்பார்த்திருக்க உலக கிண்ணத்தை சுவீகரிக்க களமிறங்கின Argentina மற்றும் France. Messi எனும் நம்பிக்கையில் Argentina அணியும் கடந்த உலக கிண்ணத்தில் Argentina அணியை 4-3 என வீழ்த்திய களிப்பில் France அணியும் களமிறங்கின.

ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய Argentina அணிக்கு Di Maria Penalty வாய்ப்பை பெற்று கொடுக்க அதை Goal ஆக மாற்றி இவ் உலக கிண்ணத்தில் குழு நிலைப் போட்டிகள், Round of 16, காலிறுதி, அரைஇறுதி மற்றும் இறுதி போட்டிகளில் Goal அடித்து புதிய சாதனையைப் படைத்தார் Messi. தொடர்ந்து Di Maria இன் Goal உடன் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது Argentina.

இரண்டாம் பாதியில் சற்று ஆதிக்கம் செலுத்திய France அணிக்கு 80 ஆவது நிமிடத்தில் Mbappe அடுத்தடுத்த நிமிடங்களில் Goal அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். 80 ஆவது நிமிடம் வரை முன்னிலையில் இருந்த Argentina அணி அடுத்தடுத்து 2 Goal களை வழங்கி உலக கிண்ணத்தை நழுவவிடும் தறுவாயில் ஆட்டத்தின் 90 முழு நேரம் முடிவடைந்து மேலதிக நேரத்துக்கு ஆட்டம் நுழைந்தது. மேலதிக நேரத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் பெறப்படாத நிலையில் இரண்டாம் பாதியில் Messi Argentina அணிக்காக Goal அடுத்து ஏறத்தாழ உலக கிண்ணத்தை Argentina அணிக்கு உறுதிப்படுத்தினார்.

எனினும் மேலும் ஒரு திருப்புமுனையாக 118 ஆவது நிமிடத்தில் France அணிக்கு Mbappe Penalty மூலம் Goal அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார். 3 Goal களையும் Mbappe அடித்து Hatrick சாதனை படைத்ததுடன் 1966 ஆம் ஆண்டின் பின் உலக கிண்ண இறுதி போட்டியில் Hatrick பதிவாவது இதுவே முதல் முறையாகும்.

தொடர்ந்து ஆட்டம் Penalty Kicks இற்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் France அணிக்கு இலகுவான Goal அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் Argentina அணியின் Goal காப்பாளர் Emi Martinez இன் சிறப்பான தடுப்பில் Argentina அணி Goal வழங்காமல் ஆட்டத்தை சமநிலையில் முடித்தது.

ஆட்டம் Penalty Kicks இற்கு நகர்ந்தது. Penalty Kicks இல் Emi Martinez சிறப்பாக செயற்பட்டு 2 Goal களை தடுத்து Argentina அணிக்கு உலக கிண்ணத்தை பெற்று கொடுத்தார்.

ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் உலக கிண்ணத்தை முத்தமிட்டு தன் வசப்படுத்தினார் கால்பந்து ஜாம்பவான் Lionel Messi.

கால்பந்து வரலாற்றில் நடைபெற்ற ஒரு சிறந்த போட்டியாக இப்போட்டி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

உலக கிண்ணத்துடன் Golden Ball விருதை Messi இரண்டாவது முறையாக கைப்பற்றியதுடன் இரண்டாவது உலக கிண்ணத்தை மயிரிழையில் தவறவிட்ட இளம் நாயகன் Mbappe Golden Boot விருதை பெற்றுக் கொண்டார். Argentina அணியின் தடுப்பு சுவர் Emi Martinez சிறந்த Goal காப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். இளம் வீரர் விருதை Argentina அணியின் Fernandez பெற்று கொண்டார்.

3 ஆவது முறையாக உலக கிண்ணத்தை வெற்றி கொண்டு 16 வருட ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கத்தை முறியடித்துள்ளது Argentina.

Related posts

சித்திராங்கதா

Thumi202121

பழிக்குப் பழி

Thumi202121

வினோத உலகம் – 20

Thumi202121

1 comment

Leave a Comment