இதழ் 55

வினோத உலகம் – 20

இம்முறை கால்பந்து இறுதிப்போட்டி தொடர்பாக  தேடப்பட்டதைப் போல் கடந்த 25 ஆண்டுகளில் வேறு எதுவும் தேடப்படவில்லை என அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ‘ராடிசன் புளூ’ என்கிற பிரபல நட்சத்திர ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் மையப்பகுதியில் 52 அடி உயரம் கொண்ட கண்ணாடியால் ஆன ராட்சத மீன் தொட்டி இருந்தது. இது உலகின் மிகப்பெரிய நிற்கும் உருளைவடிவிலான மீன் தொட்டியாக அறியப்பட்டது. ‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த ராட்சத மீன் தொட்டி உடைந்து, சிதறியது. அதை தொடர்ந்து தொட்டியில் இருந்து வெளியேற தண்ணீர் ஓட்டலுக்கு வெளியே வந்து சாலையில் ஆறாக ஓடியது. தொட்டியில் இருந்த நூற்றுக்கணக்கான அரியவகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து செத்தன. ஓட்டலுக்குள் வெப்பநிலை, மைனஸ் 6 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் மீன் தொட்டியின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும். இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

உடல் பருமனான கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வணிக வளாகங்களில் தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுகாதார நிபுணர் வின்சென்ட் கான்ட்ரா வினாட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக எடை கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு மோசமான முன்னுதாரணத்தை அமைத்து அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிப்பதால் அனைத்து உடல் பருமனான சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) தடை செய்ய வேண்டும். சாண்டா உடல் பருமனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஏனென்றால் அது தவறான செய்தியை அளித்துவிடும். நீங்கள் நிறைய சாப்பிட வேண்டும். அதை பண்டிகைகளுடன் தொடர்புப்படுத்தி கொண்டாட வேண்டும் என்பதற்கு எதிராக போராட விரும்புகிறேன். அதிக எடையுடன் இருப்பதை மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்தக்கூடாது. புதிய நெறிமுறைகளை வகுத்து சாண்டா கிளாஸ் பருமன் இல்லாமல் இருக்க நான் விரும்புகிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா உடையின் முன்பகுதியில் தலையணைகள் அல்லது வேறு பொருட்களை திணிக்கும் பழக்கம் முடிவுக்கு வரவேண்டும். வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது. இது மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

காலம் போல நாமும் புதுப்பித்துக் கொள்வோம்

Thumi202121

இறுதிநாள்

Thumi202121

களைகட்டிய கட்டார் உலகக்கிண்ணம் 2022

Thumi202121

Leave a Comment