இதழ் 55

அளவுக்கு மீறினால்…….

சிந்தனை செய்தல் சிந்தைக்கினிது தான்
அதிசிந்தனை ஆகிடில் நிந்தனை ஆக்கிடும்..
வேகம் வேண்டும் தான் வேலைகள் முடித்திட
அதிவேகம் ஆகிடின் அவசர சிகிச்சையும்
அது பலன் இல்லையேல் அகாலத்தில் ‘அமரர்”
ஆகுதல் வேண்டும்…
சுற்றம் சூழ்தல் சுகம் தந்திடினும்
நித்தம் போனால் முற்றமும் சலித்து
முற்றுப் பெற்றிடும்…
ஆசை கொள்ளுதல் ஆகாத செயல் அல்ல
பேராசை ஆகிடின் பெருநட்டம் சூழ்ந்து
போராட்ட வாழ்வாகும்…
வலிமை என்பது வரமே ஆனாலும்
அதிவலி ஆகிடின் அதோகதியாகி
அவலம்தான் எஞ்சிடும்…
பொறுமை பொன்னாய் போற்றப்படினும்
பொறுத்துப் பொறுத்துப் போவோர் வாழ்வு
வெறுமை ஆகி வென்றிடும் தோல்வி…
இலக்கியம் தனிலே பொறுமை வென்றிடும்
இகத்தினில் இன்னமும் இழப்பே பொறுமைக்கு..
இதனால் தானே பொறுமைக்கும் எல்லை வகுத்தோம் நாமே…..

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 04

Thumi202121

சித்திராங்கதா

Thumi202121

வினோத உலகம் – 20

Thumi202121

Leave a Comment