இதழ் 55

வயோதிபத்தில் உள ஆரோக்கியம்

நீண்ட மனித வாழ்வில் வரமாகியவர்கள் வயோதிபர்களாவர்கள்.
‘வரலாற்றின் பிரதிவிம்பங்களாகவும் திகழ்கின்றவர்கள்” எனலாம். இவர்கள் முதியோர்கள், முதிமை யடைந்தவர்கள், பெரியோர்கள் போன்ற சொல்லாடல்கள் கொண்டு அழைக்கலாம். வயோதிபம் எனும் போது மூளை நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அணுக்களின் முதுமை நிலை என விளக்கம் தருகிறது.

மனிதனில் பிறப்பை போன்று முதுமையும் தவிர்க்க முடியாத பருவமாகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இப்பருவம் வரையறுத்து நிற்கிறது. இதில் 60-64 வயதுக்கு இடைப்பட்டோர் வயதில் மூத்தவர் எனவும்இ 65-74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இளைய முதுமை எனவும்இ 75-85 வயதிற்க்கு இடைப்பட்டோர் நடுத்தர வயோதிபர் என்றும் 85 வயதிற்க்கு மேற்பட்டோர் மிக முதுமை எல்லைப்பாட்டுக்குள் உள்ளடங்குகின்றனர்.


உலகளவில் 800 மில்லியனை அடைந்துள்ள வயோதிபர்களின் எண்ணிக்கை இலங்கையில் 2.2 மில்லியனை அடைந்துள்ளமை அறியப்படக்கூடியது. தற்போது12மூ ஆக காணப்படும் வயோதிபர்களின் சராசரி 2050 களில் 22மூ ஆக மாறலாம் என எதிர்பாக்கப்படுகின்றது. இதற்கு சிறுவர்களின், ஊழியர் படையினதும் தொய்வு நிலையினை பெரும்பாலும் காரணமாகலாம். எவ்வாறாயிலும் முதியோரது சனத்தொகை அடைதலானது அதிகரித்துள்ளமை காணகூடியதாகவே உள்ளது. இது இவ்வாறு செல்ல செல்ல இவர்களுக்கான பிரச்சனையும் பலவாறாய் வியாப்பிக்கிறது எனலாம். பெரும்பாலும் வயோதுபர்களின் பிரச்சனைக்கான காரணம் அவர்களது உள ஆரோக்கியம் பேணப்படாமையினால் ஏற்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. இது தொடர்பான தெளிவு நிலை இன்றைய சமுதாயத்தினரிடம் காணப்படுவதாக தெரியவில்லை.


அந்த வகையில் ‘உள ஆரோக்கியம் என்பது உளவியல் ரீதியாக நல்ல நிலையில் மனநோயுன்றி வாழவதாகும்.” இத்தகைய உள ஆரோக்கியத்தினை பாதிக்கும் காரணிகளாக பின்வருவனவற்றை எடுகோளிடலாம். உடல்சார் காரணிகள், உளவியல் சார் காரணிகள், சமுதாய காரணிகள் என்றவாறு வகைப்படுத்தலாம்.

இவற்றுள் உடல் சார் காரணி எனும் போது எல்லா வயதினரும் இவற்றில் சிக்குண்டிருப்பர். இருந்தாலும் வயோதிபர்கள் முடி நரைத்தல், ஞாபக மறதி, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தளர்வு, புலன் உள்வாங்குதல் குறைபாடு, நாளமில்லா சுரப்பிகளிலும், தசைநார்களும் ஏற்படும் சக்தி குறைவு, தொகுதி சார் பகுதிகளில் ஏற்படும் பலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைதல் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.

உளவியல் சார் காரணி எனும் போது உடலியல் சார் காரணிகளில் ஏற்படும் தொய்வு, அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை பின்னணி, ஆளுமைக்காரணிகள் என பல விடயங்கள் இதற்குள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதன் போது முதுமை நிலையை அடைந்தவர்கள் தன் வாழ்வில் இனி வரும் நாட்களில் பற்றிய பயம், நிறைவேறதாத ஆசை பற்றிய ஏக்கம், உடல்நலம் பற்றிய கவலை, இறப்புதுயர்(கணவன்,மனைவி), தனிமைப்படுத்தப்படல் என பலவற்றை கூறலாம்.

மேற்குறிப்பிட்டவை போன்று சமுதாயம் சார் காரணிகளும் உள பாதிப்பினை உண்டாக்குகின்றன. இன்றைய இளைய சமுதாயத்தினர் நவீன உலகம் என்ற பேரில் கிழடு, உதவாக்கரை, வயசு, நோய்களின் உறைவிடம் என்றெல்லாம் வயோதிபர்களை விமர்ச்சிகின்றனர். இது தவிர முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்கின்றனர். மேலும் இன்றைய நவீன சூழலுக்கு ஒத்தும் போக முடியாமை, வறுமை, யுத்த அழிவு போன்ற காரணியும் முக்கியமானவை.

மேலே நாம் குறிப்பிட்ட மானிடனுக்கு உளம் சார் ஆரோக்கியத்தினை குறைத்து உள ரீதியான பிரச்சனைக்கு ஊக்கமளிக்கின்றன. அவ்வகையில் பாரிய உளப்பிரச்சினை, மிதமான உளப்பிரச்சனை என இது 02 வகைப்பாட்டுக்குள் உள்ளடங்குகிறது பாரிய உளப்பிரச்சினைகள் எனும் போது மாறாட்டம் (ஊழகெரளழைn), சந்தேக உளமாய நோய் (Pயசயழெனை pளலஉhழளளை), அறனை பெயர்தல(னுநஅநவெயை) போன்றன உள்ளடங்குகின்றன.

மிதான உளப்பிரச்சனை எனும் போது பதகளிப்பு, வெறுங்கூட்டு நிலை(நுஅpவல நௌவ ளலனெசழஅந), இறப்பு, இழப்பு துயர் போன்றனவும் உள்ளடங்குன்றன. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து வயோதிபர்களை பாதுகாப்பதன் ஊடாகவே அவர்களது உள ஆரோக்கியத்தை பேண முடியும். கடவுள் எந்த உயிரையும் வீணாக படைக்கவில்லை என்பதன் படி முதுமையடைந்தோரையும், அவர்களது உள ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

அந்த வகையில் அவர்களை பேணி பாதுகாக்க வேண்டிய உள ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய வழிகளை மறந்தோமா? மறுந்தளித்தமோ! என்பது கேள்விக்குறிதான் அவ்வாறான சில வழிகள் வருமாறு….

01.முதியோர்களுக்கு ஏற்படும் உடல், உள, ஆன்மீக பிரச்சினைகள், தேவைகளை போன்றவற்றை அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அதேசமயத்தில் அதனை நிவர்த்திக்கும் திட்டங்களை முன்வைத்தல் வேண்டும்.

02.இறப்புத்துயர் ஏற்படும் போது வயோதிபர்களை தனித்து விடாது அன்பு, கரிசனை, அக்கறை போன்றவற்றை வழகுதல்.

03.முதியோர் கூறும் விடயத்தினை காது கொடுத்து உன்னிப்பாக செவிமடுக்க வேண்டும். அதேசமயம் அவர்களது ஆலோசனைப்படியும் நடக்க வேண்டும் .

04.முதுமையில் உடல் , உள ரீதியாக ஏற்படும் அசௌகரிய நிலையானது சாதாரணமானது தான், என்பதை புரியவைத்து அதற்கு முன்கூட்டியே ஆயத்தப்படுத்தல். (ஆரோக்கியமாக கையாள உதவுதல் ) நுஒ..ஊட்டச்சந்து உணவை வழங்கல், தியான, பொருத்தமான உடற்பயிற்சிகளை செய்ய வழிகாட்டல் . ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபட உதவுதல்;, போதைபொருள் மீது நாட்டம் கொள்ளாது பாதுகாத்தல்

05.அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் தொடர்ந்தும் ஈடுபட வைத்தல். அதாவது முன்பு செய்த ஆக்கத்திறன் ரீதியான செயற்பாடுகளை மீள்வலியுருத்தி மீண்டும் அதில் ஈடுபட வைத்தல். நுஓ.. சமுக அபிவிருத்தி

06.அவர்களது அறிவாற்றல் தொகுதியை புத்துணர்வு செய்தல். இவ்வாறு பல வழிகளை மேற்கொள்ளலாம்.


எனவே போற்றி பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷங்களை இன்றைய இயந்திர உலகம் என்ற பேரில் இயக்கமற்றோராய் மாற்றியுள்ளோம் என்பதனை உணர்ந்து அவர்களது உள ஆரோக்கியத்தை இனியாவது பாதுகாத்து தலை தாழ்த்தி வணங்கி தலை நிமிர்ந்து வாழ்வோம்.

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 04

Thumi202121

ஈழச்சூழலியல் 41

Thumi202121

பழிக்குப் பழி

Thumi202121

Leave a Comment