பெப்ரவரி மாதம் உலகம் காதலை கொண்டாடும் தனிச்சிறப்பானதாகும். காதலை ஓர் நாளில் சுருக்கி கொண்டாட முனைந்ததால், ஏனைய 364 நாட்களும் காதலை கொள்கிற அவலங்களும் அரங்கேறுகிறது. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி சதுரி ஹன்சிகா, அவரது காதலனால் படுகொலை செய்யப்பட்ட செய்தி சமகாலத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவை காதலை சரியாக புரிந்து கொள்ள இயலாத மற்றும் புரிய வைக்காத சமூகத்தின் தவறேயாகும்.
ஆரோக்கிமான காதலுக்கும், வாழ்கைக்கும் உடல் தகுதியை விட உளத்தகுதியே முக்கியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக உளவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.கஜவிந்தன் தெரிவித்துள்ளார். இது காதல் பற்றிய புரிதலுக்கு அவசியமாகிறது. காதலில் ஏற்படும் கொலைகளும் தற்கொலைகளும் உளவியல் பிரச்சினையில் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றது.
எடுத்துக்காட்டாக, சிலர் தங்கள் காதல் இருவருக்கும் சரிவராது எனத் தெரிந்தாலும் அடிமைத்தனத்துடனும், முட்டாள்தனத்துடன் காதல் செய்தவரை ஒருவர் பிரிய முடியாது என்ற எண்ணங்களும் வாழத்தலைப்படுகிறார்கள்.; இன்னும் சிலர் ஒருவரால் நிராகரிக்கப்படும்போது தன் மீது என்ன தவறு என்பதை ஆராயாமல், அவளுக்காக வாழ்ந்த தான் ஏமாற்றப்பட்டதாகவும், பயன்படுத்தப்பட்டதாகவும், நிராகரிக்கப்பட்டதாகவும் உணருகிறான்;. இதனால் தனக்கு கிடைக்காத ஒன்று எவருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். இவ்வாறான உளவியல்சார் அழுத்தங்கள் காதலின் தவறான எடுத்துக்காட்டுகளுக்கு காரணமாகி விடுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அன்பும் விசமாகிறு என்பதையே காதலின் மரணங்கள் வெளிப்படுத்துகிறது.
காதல் உன்னதமான மனித உணர்வாகும். அழிவாகும் காதல் பல ஆக்கங்களுக்கும் காரணமாகி உள்ளது. காதலர் தினம் அன்பின் பரிமாற்றத்தை நினைவுகூர்ந்து மெய்ச்சுவதற்கானதே. இன்று வணிக நோக்கில் காதலர் தின வடிவங்களும் மாறி விளைவுகளும் காமத்துக்குள் திரிபடைந்து காதலை இழிவு செய்கிறது. காதலை தினமும் செய்வோம். ஒரு நாளின் அன்பை பொழிந்து, பல நாளில் சினத்தை கொட்டும் சமூக திரிபை மீளச்சரிசெய்வோம்.
காதல் செய்வோம்! தினமும்! அனைத்திலும்!