இதழ் 56

வினோத உலகம் – 21

சீனாவில் தொழில்நுட்ப ஜாலங்களுடன் முயல் புத்தாண்டை வரவேற்று, கொண்டாட்டங்கள் களைகட்டின. சீனாவில் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுவதோடு, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்குகளின் பெயரில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பல்வேறு பின்னணிகளுடன் உருவாக்கப்பட்ட மேடையில், அழகழகாய் முயல் போல உடையணிந்த சின்னஞ்சிறார் விழாவை அலங்கரித்தனர். அதைத் தொடர்ந்து, சீனாவின் பாரம்பரிய ஆடல், பாடல் மற்றும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. அதேபோல், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுடன் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நாய்கள் பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதிகபட்சம் உயிர்வாழும். ஒரு சில நாய் இனங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும். 23 ஆண்டுகள் வாழ்ந்து வரும் அமெரிக்க நாய் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஸ்பைக் என்று பெயரிடப்பட்டுள்ள சிவாவா இன கலவை நாய் ஒன்று 23 ஆண்டுகள் 7 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை பிடித்துள்ளது. பொதுவாக சிவாவா இனத்தில் உள்ள நாய் 12-18 ஆண்டுகள் உயிர் வாழும். அதன் கலப்பு இனங்கள் கொஞ்சம் கூடுதல் நாட்கள் உயிரோடு இருக்கும்.

லாஸ் ஏஞ்சல்ஸில்  2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம்  ,ஜினோ என்ற  22 வயதான சிவாவா கலப்பு நாய் , உலகின் மிக வயதான நாய் என்று  பெயரிடப்பட்டது. அதன் பின்னர் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்பைக் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

‘உலகின் அழிவு நாள்’-ஐ குறிக்க ஆங்கிலத்தில் டூம்ஸ் டே என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்திற்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக புல்லட்டின் ஆஃப் அட்டாமிக் சயின்டிஸ்ட் என்ற விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு 1947ஆம் ஆண்டில் டூம்ஸ் டே கடிகாரம் என்ற கடிகாரத்தை வடிவமைத்தனர். அல்பெர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட முன்னணி விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து வடிவமைத்த இந்த கடிகாரம் உலகின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை பிரதிபலிக்கும். 

ஆண்டுதோறும் உலகின் முன்னணி விஞ்ஞானிகள் இந்த கடிகாரத்தின் முள்ளை மாற்றி அமைப்பார்கள். இந்த டூம்ஸ் டே கடிகாரத்தில் மணி நள்ளிரவு 12ஐ தொட்டால் உலகம் அழிவு தினத்தை அடைந்துவிட்டது எனப் பொருள். கடிகார முள் 12 மணிக்கு அருகே இருந்தால் உலகின் நிலை மோசமாக இருப்பதாக பொருள். எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, அவ்வளவு நலமாக உலகம் செயல்படுகிறது என்று கருதப்படும். இந்நிலையில், இந்தாண்டு கடிகார முள்ளை விஞ்ஞானிகள் 12 மணிக்கு மிக நெருக்கமாக வைத்துள்ளனர். அதன்படி, கடிகார முள் 12 மணியை நெருங்க 90 நொடிகளே உள்ளன. இதன் மூலம் உலகம் அழிவுக்கு அருகே உள்ளதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். 

கோவிட் பரவல், ரஷ்யா-உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் என பல நெருக்கடிகளை உலகம் சந்தித்து வருவதால் மிக மோசமான சூழல் நிலவுவதாக விஞ்ஞானிகள் கடிகார முள்ளை இவ்வளவு நெருக்கமாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு முன்னர் சோவித் ரஷ்யா – அமெரிக்கா இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த போது தான் கடிகார முள் நெருக்கமாக இருந்துள்ளது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய பீதி குறைந்தது. 

2020ஆம் ஆண்டில் 100 நொடிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 நொடிகள் குறைத்து 90 நொடிகளில் வைக்கப்பட்டுள்ளது.உலக நாடுகளின் போர் தாக்குதல்கள், கால நிலை மாற்றம் போன்றவற்றை அனைவரும் ஒன்றிணைந்து சீர் செய்தால் மட்டுமே மனித இனம் நலமுடன் வாழ முடியும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் மின்சாரம் இல்லாத பகுதிகளில் இயக்கக்கூடிய கையால் இயக்கும் வகையிலான  வாசிங் மெஷினை கண்டுபிடித்த பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாவ்னிக்கு இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது கிடைத்துள்ளது.

Related posts

சித்திராங்கதா

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 05

Thumi202121

மட்டக்களப்பில் வேலையின்மையும் வறுமையும்

Thumi202121

1 comment

Leave a Comment