இதழ் 57

ஆரம்பமாகிறது WPL

தற்போது உலகளவில் மகளீர் துடுப்பாட்டத்தை பிரபலப்படுத்த பலதரப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு மைற்கல்லாக மாறியுள்ளது; இந்திய கிரிக்கெட் வாரியம் ஆரம்பித்துள்ள ‘மகளீர் பிரீமியர் லீக்’ (WPL). அதிக துடுப்பாட்ட ரசிகர்களை கொண்டிருப்பதால் துடுப்பாட்ட போட்டிகளின் சந்தையாக உள்ள இந்தியாவில் ஆண்களுக்கென இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இருப்பது போன்று அதே போன்ற ஒரு தொடர் பெண்களுக்கும் நடாத்த வேண்டும் என்பது நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இருப்பினும் 2018 இல் ஒரு போட்டி கொண்ட தொடராக ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மூன்று வருடங்களாக IPL இறுதி போட்டிகளுக்கு முன்னதாக மூன்று அணிகள் கொண்ட ஒரு மகளீர் தொடராக நடந்து வந்த நிலையில்; தற்போது பெங்களூரு டெல்லி மும்பை அஹமதாபாத் லக்னோ எனும் ஐந்து இடங்களை மையப்படுத்தி ஐந்து அணிகள் கொண்ட தொடராக உருவெடுத்துள்ளது. இதற்கான அணி வீரர்களுக்களை தேர்வு செய்வதற்கான ஏலமானது, கடந்த மாதம் 13 ம் திகதி நடைபெற்றது.

ஒவ்வொரு அணியும் இந்திய ரூபாய் மதிப்பில் பன்னிரண்டு கோடிகளை செலவு செய்து அதிகபடியாக 18 மற்றும் குறைந்தது 15 வீரர்களை எடுக்கமுடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது; இதனுள் ஆறு வீரர்கள் பிற நாட்டு வீரர்களாக இருக்கமுடியும். முன்னதாக இந்த ஐந்து அணிகளின் உரிமையாளருக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, பெங்களூரு டெல்லி மும்பை அணிகளை முறையே 901, 810, 912.99 கோடிகளை கொடுத்து அதன் IPL அணி உரிமையாளர்களே வாங்கிய நிலையில், அஹமதாபாத் அணியை அதானி குழுமம் 1289 கோடிகளையும் லக்னோ அணியை கேப்ரி குளோபல் 757 கோடிகளையும் கொடுத்து வாங்கியிருந்தனர். அவ் அணிகளின் பெயர் மற்றும் தலைமை பயிற்சியாளர் விபரம் வருமாறு:


பெங்களூரு – றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பென் சவ்யேர்,
டெல்லி – டெல்லி கேபிட்டல்ஸ் – ஜொனாதன் பேட்டி,
மும்பை – மும்பை இந்தியன்ஸ் – சார்லோட் எட்வர்ட்ஸ்,
அஹமதாபாத் – குயரத் கியன்ட்ஸ் – ராக்கேல் ஹெய்ன்ஸ்,
லக்னோ – உபி வாரியர்ஸ் – ஜான் லெவிஸ்.


இதை விட ஆலோசகர்களாக முன்னாள் இந்திய அணித் தலைவியான மித்தாலி ராஜ், குயரத் கியன்ட்ஸ் அணிக்கும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜகுலன் கோஸ்வாமி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நியமிக்க பட்டுள்ளனர்.

இந்த வீரர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு இந்திய ஆரம்ப மட்டையாளரான ஸ்ம்ரிதி மந்தனா, 3.40 கோடிகளுக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்த படியாக தலா 3.20 கோடிகளுக்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி சகலதுறை வீராங்கனையான அஷ்லேயி கார்ட்னர், குயரத் கியன்ட்ஸ் அணியாலும் இங்கிலாந்தின் அதிரடி சகலதுறை வீராங்கனையான நடாலி சிவேர் மும்பை இந்தியன்ஸ் அணியாலும் வாங்கப்பட்டு இருந்தனர். உப்பு வாரியர்ஸ், இந்தியாவின் தீப்தி சர்மா வினை 2.60 கோடிகளுக்கும் டெல்லி கேபிட்டல்ஸ், மற்றுமொரு இந்திய வீராங்கனையான ஜெமிமாஹ் ரோட்ரிகோஸ் இனை, 2.20 கோடிகளுக்கும் வாங்கப்பட; தலா 2 கோடிகளுக்கு ஆஸ்திரிலியாவின் ஆரம்ப ஆட்டக்கரரான பெத் மூனியினை குஜராத் கியன்ட்ஸ் அணியும் இந்தியாவின் இளம் வீராங்கனையான ஷபாலி வர்மாவினை டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அடுத்தபடியான அதிக விலையில் ஏலமெடுத்தனர்.

றோயல் சேலஞ்சர்ஸ் அணியால் 1.7 கோடிகளுக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய மகளீர் அணியின் சகலதுறை வீராங்கனையும் ஐசிசி 2010-2020 தசாப்தத்தின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையுமான எல்ஸ் பெர்ரி, “எனது கண்ணோட்டத்தில், பண மதிப்பின் அடிப்படையில் எங்களில் யாரும் உரையாடலை முன்னெடுத்ததாக நான் நினைக்கவில்லை. இதைவிடப் பெரியது ஏதோ இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, ஊதியம் மற்றும் அந்த வகையான பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு அற்புதமானது, ஆனால் அதைவிடப் பெரியது உலகெங்கிலும் உள்ள விளையாட்டின் பொதுவான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன். இந்தியா ஒரு வகையானது, நான் நினைக்கிறேன், நிறைய உணர்வுகளில் கிரிக்கெட்டின் ஆன்மீக இல்லம். இப்போது பெண்கள் இந்திய சந்தையிலும் இந்திய விளையாட்டிலும் மிகவும் வலுவான இருப்பைத் தொடங்கியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன், இதுவானது எந்தவொரு வீரரின் மீதும் வைக்கப்படும் எந்த விதமான டாலர் மதிப்பையும் விட முக்கியமானது.” இது தொடர்பாக கூறினார்.

மும்பை இந்தியன்ஸ்


மட்டையாளர்கள்: ஹர்மான்ப்ரீட் கவுர் (இந்தியா, 1.60 கோடி), அமஞ்சோட் கவுர் (இந்தியா, 50 லட்சம்), தாரா குஜ்ஜார் (இந்தியா, 10 லட்சம்), சைகா இஸ்ஹாயூ (இந்தியா, 10 லட்சம்), பிரியங்கா பாலா (இந்தியா, 20 லட்சம்), மற்றும் நீலம் பீஸ்ட், (இந்தியா, 10 லட்சம்).


சகலதுறையாளர்கள்: நடாலி சிவேர் (இங்கிலாந்து, 3.20 கோடி), அமெலியா கெர் (நியூஸிலாந்து, 1.00 கோடி), Pooja Vastrakar (இந்தியா, 1.90 கோடி), ஹெதர் கிரகாம் (ஆஸ்திரேலியா, 30 லட்சம்), ஹயலே மத்தியூஸ் (வெஸ்ட் இண்டீஸ், 40 லட்சம்), சோலி ட்ரியன் (சவுத் ஆப்பிரிக்கா, 30 லட்சம்), ஹுமைரா கஜி (இந்தியா, 10 லட்சம்), மற்றும் ஜிண்டமணி கலிட (இந்தியா, 10 லட்சம்)


பந்து வீச்சாளர்கள்: இஸி வோங் (இங்கிலாந்து, 30 லட்சம் மற்றும் சோனம் யாதவ் (இந்தியா, 10 லட்சம்).


இலக்கு காப்பாளர்: யஸ்டிக பாடிய (இந்தியா, 1.50 கோடி).

டெல்லி கேபிட்டல்ஸ்


மட்டையாளர்கள்: ஜெமிமாஹ் ரொட்ரிகோஸ் (இந்தியா, 2.20 கோடி), மெக் லென்னிங் (ஆஸ்திரேலியா, 1.10 கோடி), ஷபாலி வர்மா (இந்தியா, 2 கோடி), அலிஸ் கேப்செய் (இங்கிலாந்து, 75 லட்சம்), லாரா ஹாரிஸ் (ஆஸ்திரேலியா, 45 லட்சம்) மற்றும் ஜெசியா அக்தார் (இந்தியா, 20 லட்சம்).


சகலதுறையாளர்கள்: ராதா யாதவ் (இந்தியா, 40 லட்சம்), மரிசன்னே காஃப் (சவுத் ஆப்பிரிக்கா, 1.5 கோடி), ஷிகா பாண்டே (இந்தியா, 60 லட்சம்), சினேகா தீப்தி (இந்தியா, 30 லட்சம்), அருந்ததி ரெட்டி (இந்தியா, 30 லட்சம்) மற்றும் மின்னு மணி (இந்தியா, 30 லட்சம்).


பந்து வீச்சாளர்கள்: டிடாஸ் சாது (இந்தியா, 25 லட்சம்), தாரா நோரிஸ் (அமெரிக்கா, 10 லட்சம்), பூனம் யாதவ் (இந்தியா, 30 லட்சம்), மற்றும் ஜெஸ் ஜனஸ்ஸன் (ஆஸ்திரேலியா, 50 லட்சம்).


இலக்கு காப்பாளர்கள்: தனியா பாடிய (இந்தியா, 30 லட்சம்), மற்றும் அபர்ணா மோன்டால் (இந்தியா, 10 லட்சம்).

குஜராத் கியன்ட்ஸ்


மட்டையாளர்கள்: சோபியா டங்கலி (இங்கிலாந்து, 60 லட்சம்), S மேகனா (இந்தியா, 30 லட்சம்), மற்றும் D ஹேமலதா (இந்தியா, 30 லட்சம்).


சகலதுறையாளர்கள்: அஷ்லேயி கார்ட்னர் (ஆஸ்திரேலியா, 3.20 கோடி), அன்னாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா, 70 லட்சம்), ஹர்லீன் தியோல் (இந்தியா, 40 லட்சம்), டீன்ட்ரா டொட்டின் (வெஸ்ட் இண்டீஸ், 60 லட்சம்), மோனிகா படேல் (இந்தியா, 30 லட்சம்), ஹரிலே காலா (இந்தியா, 10 லட்சம்) மற்றும் அஸ்வனி குமாரி (இந்தியா, 30 லட்சம்).


பந்து வீச்சாளர்கள்: ஸ்நேஹ் ராணா (இந்தியா, 75 லட்சம்), ஜோர்ஜியா வராஹம் (ஆஸ்திரேலியா, 75 லட்சம்), மான்சி ஜோஷி (இந்தியா, 30 லட்சம்), தனுஜா கன்வெர் (இந்தியா, 50 லட்சம்), பருணிகா சிசோடியா (இந்தியா, 10 லட்சம்), மற்றும் ஷாப்னம் MD (இந்தியா, 10 லட்சம்).


இலக்கு காப்பாளர்கள்: பெத் மூனே (ஆஸ்திரேலியா, 2.00 கோடி) மற்றும் சுஷ்மா வர்மா (இந்தியா, 60 லட்சம்)

றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


மட்டையாளர்கள்: ஸ்ம்ரிதி மந்தனா (இந்தியா, 3.40 கோடி), கனிகா அஹுஜா (இந்தியா, 35 லட்சம்), ஆஷா ஷோபனா (இந்தியா, 10 லட்சம்), ஷ்ரேயங்க பட்டீல் (இந்தியா, 10 லட்சம்), மற்றும் திஷா கசாட் (இந்தியா, 10 லட்சம்).


சகலதுறையாளர்கள்: எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா, 1.70 கோடி), சோபிய டேவின் (நியூஸிலாந்து, 50 லட்சம்), எரின் பேர்ன்ஸ் (ஆஸ்திரேலியா, 30 லட்சம்), ஹெதர் நைட் (இங்கிலாந்து, 40 லட்சம்), டேன் வான் நியேகேரக் (சவுத் ஆப்பிரிக்கா, 30 லட்சம்) மற்றும் பூனம் ஹெம்னார் (இந்தியா, 10 லட்சம்)


பந்து வீச்சாளர்கள்: ரேணுகா சிங் (இந்தியா, 1.50 கோடி), ப்ரீதி போஸ் (இந்தியா, 30 லட்சம்), கோமல் சான்சத் (இந்தியா, 25 லட்சம்), மேகன் ஸ்சுட் (ஆஸ்திரேலியா, 40 லட்சம்) மற்றும் சஹானா பவார் (இந்தியா, 10 லட்சம்)


இலக்கு காப்பாளர்கள்: ரிச்சா ஹோஷ் (இந்தியா, 1.90 கோடி), மற்றும் இந்திராணி ரோய் (இந்தியா, 10 லட்சம்)

உபி வாரியர்ஸ்


மட்டையாளர்கள்: கிரண் நவகிரே (இந்தியா, 30 லட்சம்), மற்றும் சிம்ரன் ஷைஹ் (இந்தியா, 10 லட்சம்).


சகலதுறையாளர்கள்: தீப்தி சர்மா (இந்தியா, 2.60 கோடி), சோபிய ஏசிலெஸ்டொனே (இங்கிலாந்து, 1.80 கோடி), தேவிகா வைத்யா (இந்தியா, 1.4 கோடி), தஹலை மெக்ராத் (ஆஸ்திரேலியா, 1.40 கோடி), சுவேதா செஹ்ரவாட் (இந்தியா, 40 லட்சம்), மற்றும் பர்ஷாவி சோப்ரா (இந்தியா, 10 லட்சம்).


பந்து வீச்சாளர்கள்: ஷாப்நிம் இஸ்மாயில் (சவுத் ஆப்பிரிக்கா, 1.00 கோடி), கிராஸ் ஹாரிஸ் (ஆஸ்திரேலியா, 75 லட்சம்), அஞ்சலி சர்வானி (இந்தியா, 55 லட்சம்), ராஜேஸ்வரி கையக்வாட் (இந்தியா, 40 லட்சம்), லாரன் பெல் (இங்கிலாந்து, 30 லட்சம்), S யஷாஸ்ரீ (இந்தியா, 10 லட்சம்), மற்றும் லட்சுமி யாதவ் (இந்தியா, 10 லட்சம்)


இலக்கு காப்பாளர்: அலிஸ்ஸா ஹீலி (ஆஸ்திரேலியா, 70 லட்சம்)

2023க்கான முதல் தொடர் இம்மாதம் மும்பை மற்றும் நவிமும்பை யில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் போது ஐந்து அணிகளும் தமக்கிடையே தலா இரு ஆட்டங்கள் வீதம் 20 லீக் ஆட்டங்கள் நடைபெறும். இதன் இறுதியில் முதல் இடம் பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேற; இரெண்டாம் மற்றும் மூன்றாம் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் அணியானது இரெண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். 2026 ம் ஆண்டிலிருந்து 33/34 ஆட்டங்களாக அதிகரிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

Related posts

நிறங்கள் சொல்லட்டும் நல்ல செய்தி

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம்

Thumi202121

பள்ளிக்கூடங்களை மூடாதீர்கள்..!

Thumi202121

Leave a Comment