இதழ் 57

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம்

ஆய்வுத்தலைப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் மத்தியிலான கொரோனா பற்றிய அறிவுஇ உளப்பாங்கு மற்றும் நடத்தை தொடர்பான ஓர் மதிப்பீடு ;- வவுனியா வடக்கு ஓமந்தை கோட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூவியல் ஆய்வு.

ஆய்வு அறிமுகமும் பின்னணியும்

கொரோனா வைரஸ் நோய் [Covid-19] ஆனது டிசெம்பர் 2019 இல் சீனாவில் வுகான் நகரில் தோன்றியது. இது உலகளவில் விரைவாகப் பரவியது. 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. 2020 மார்ச் 26ஆம் திகதி நிலவரப்படி 23,000க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. முதலிடத்தில் உள்ள நாடுகளில் சீனா இருந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் அதிகரிப்பு வுகான் நகரத்தில் உள்ள கீனான் கடல் உணவு சந்தையில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. நேரடி விலங்குகள் உணவாக உட்கொள்ள விற்கப்பட்டன. வைரஸ் தோன்றியதற்கு மற்றொரு ஊகமும் உள்ளது. அமெரிக்கா அல்லது ஜரோப்பாவில் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆரம்பத்தில் இந்த வைரஸ்க்கு [2019-nCovid] எனப் பெயரிட்டனர். பின்னர் சீன ஆராய்ச்சியாளர்களால் இந்த பெயர் [SARS- Cov-2] என மாற்றப்பட்டது.
இந்தியா தனது முதல் கொவிட்-19 பதிவினை 2020 ஜனவரி 30அன்று கேரள மாநிலத்தின் காசாரகோடு நகரில் தெரிவித்துள்ளது. 6மே 2020ற்குள் [WHO- World Health Organization 2020] 49,391 பதிவுகள் [1694இறப்புக்கள் உட்பட] பதிவாகியுள்ளன. 2020 பெப்ரவரி 15தரவுகளின் படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 67,100 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

[World Health Organisation –WHO] கொரோனா வைரஸின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 ஜனவரி 09 அன்று பதிவானது. அன்று முதல் 2020 பெப்ரவரி 15 வரை 1526 இறப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவை கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.

அதுமட்டுமல்லாது 177 நாடுகளில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் அல்லது உள்;ர் அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன. இது உலக மாணவர் தொகையில் சுமார் 98.65 சதவீதத்தினரை பாதித்துள்ளது. ஜரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய பசுபிக் பகுதிகளில் பல நாடுகள் இத்தொற்றுக்களைப் பதிவு செய்தன. இத் தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை இருக்கலாம். இத் தொற்று நோய்க்கு அறியப்பட்ட தடுப்புசி அல்லது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை மற்றும் ஆதரவு ஆகியனவையே முதன்மை சிகிச்சைகளாக உள்ளன.

2020 மார்ச் 12அன்று கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. கொரோனா வைரசுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தினார். 2021 ஜனவரி 21 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில் 8,64,12,620 பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 18,68,893 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4,84,66,498 பேர் மீண்டு வந்துள்ளனர். இதில் ஜக்கிய அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. [WHO- World Health Organization].

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம் இலங்கைக்கான [WHO- World Health Organization] அலுவலகத்துடன் இணைந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்தத் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தது. 2020 ஜனவரி 26ஆம் திகதி நாட்டிற்குள் நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு ஓரு தேசிய நடவடிக்கைக் குழு நியமிக்கப்பட்டது. இத்தாலிய சுற்றுலாப் பயணிகளுடன் பணிபுரிந்த ஓரு சுற்றுலா வழிகாட்டியான 2020 மார்ச் 10ஆம் திகதி முதல் இலங்கையின் உள்;ர் நாட்டு; நேர்மறையானவர் [ Positive] என்று உறுதிப்படுத்தப்பட்டது.

மார்ச் 23ஆம் திகதி நிலவரப்படி தொற்று நோயை எதிர்த்துப்போராடுவதற்காக இலங்கை இராணுவத்தால் 40 இற்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டன. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளாக திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனிமைப் படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வாரங்களிற்கு தனிமைப் படுத்தப்பட்டனர். மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை வீசா அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டது. ஆரம்பகாலப் பயணத்தடைகள் மற்றும் நாட்டிற்கான நுழைவுப்புள்ளிகளை மூடுவது நோயாளிகளின் வருகையிலிருந்து நாட்டைப் பாதுகாத்தது.

தொற்று நோயைக் கையாள்வதில் இலங்கை சில உத்திகளை கடைப்பிடித்தது. இது குறைந்த தொற்று வீதத்திற்கும், இறப்பு விகிதத்திற்கும் வழிவகுத்தது. கொவிட் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும். அனைத்து நோயாளிகளும் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்திய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். குறிப்பாக சுவாசக் கோளாறு இருக்கும் போது மட்டுமே நோயாளிகளை மருத்துவ மனைகளில் அனுமதித்தனர். நோயாளி நோய்த்தொற்றுக்கு சாதகமாகிவிட்டால், வெளியில் உள்ள தொடர்புகளைத் துண்டித்து, முழு மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு விதித்து, மாவட்டங்களுக்கிடையேயான பயணங்களைத் தடை அமுல்ப்படுத்தப்பட்டது.

இந்த வைரஸ் பெரும்பாலும் மக்களிடையே நெருக்கமான தொடர்பின் போது, இருமல், தும்மல், மற்றும் பேசுவது ஆகியவற்றின் மூலம் உருவாகும். சிறிய நீர்த்துளிகள் வழியாகப் பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் வழக்கமாக நீண்ட தூரம் காற்று வழியாகப் பயணிப்பதை விட தரையில் அல்லது மேற்பரப்பில் விழுகின்றன. சில நேரங்களில், தொற்றுள்ள மேற்பரப்பைத் தொட்டுவிட்டு, பின்னர் தங்களின் முகத்தைத் தொடுவதன் மூலமாகவும், மக்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும். அறிகுறிகளைக் காட்டாத மக்களிடத்திலிருந்து தொற்றுப்பரவ சாத்தியம் உள்ளது. இதுதவிர, சமூக ஊடகங்கள் தொடர்ந்து கொரோனா பற்றிய போலிச் செய்திகள் மற்றும் கட்டுக் கதைகளை பரப்பியமை பொதுமக்களை மேலும் தொந்தரவு செய்தது. [ Patel, 2020, Laetal,2020 : Brindha etal, 2020].

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கைகழுவுதல், இருமும் போது ஒருவர் தம் வாயை மூடுவது, மற்றவர்களிடமிருந்து தூரத்தை பராமரித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும். இதனால் உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்கள் தங்கள் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு பணியிட முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகளை மூடல் ஆகிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தினர். சோதனைத் திறனை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளைக் கண்டறியவும் பலர் பணியாற்றியுள்ளனர்.

Covid-19 தொற்று காரணமாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளில் கிட்டத்தட்ட ஜனவரி 12, 2021 நிலவரப்படி சுமார் 825மில்லியன் கற்பவர்கள் பாதிக்கப்பட்டனர் [UNICEF]. Covid -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி மூடல்கள் காரணமாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பின்தங்கிய அபாயம் இருந்தது.

188 நாடுகளில் [ஏப்ரல் 2020] நிலவரப்படி பள்ளி மூடப்பட்ட நிலையில் அவர்களில் பலர், இணையம், தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான கல்வியை வழங்குவதற்கான மாற்று வழிகளை உருவாக்கினர். இருப்பினும், இந்த தொழில்நுட்பங்களுக்கான அணுகல் பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், குறிப்பாக ஏழை வீடுகளில் சிரமமாக உள்ளது. உலகின் குழந்தைகள் கற்க, நாடுகள் தொலை நிலை கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆயினும் உலகின் பல குழந்தைகள் குறிப்பாக ஏழ்மையான வீடுகளில் உள்ளவர்களுக்கு இணைய அணுகல், தனிப்பட்ட கணினிகள், தொலைக்காட்சிகள் அல்லது வீட்டில் வானொலியும் இல்லாத நிலையில் கற்றல் ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகள் அதிகரித்தது. வீட்டு அடிப்படையிலான கற்றலுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அணுக முடியாத மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர மட்டுப்படுத்தப்பட்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா குறித்த அச்சம் காணப்படுகின்றது. இதே போன்று மாணவர்களின் பாடசாலைச் சூழலும் கொரோனா குறித்த மாணவர்களின் அறிவு, உளப்பாங்கு, நடத்தை என்பவற்றில் தாக்கம் செலுத்துகின்றன.நண்பர்களின் சேர்க்கை, கொரோனா குறித்த ஆசிரியர்களின் கருத்து நிலை, தெரிவு செய்யும் பாடம், கட்டுப்பாட்டுத் தளர்வு போன்றன இதில் முக்கியமானவை. கொரோனா நோய் பரவல் குறித்த தவறான புரிதல் கொண்ட நண்பர்களின் சேர்க்கையானது கொரோனா பற்றிய சரியான தகவல்களை தெரிந்து கொள்வதிலும் உளப்பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

ஆராய்வோம்…

Related posts

வினோத உலகம் – 22

Thumi202121

நிறங்கள் சொல்லட்டும் நல்ல செய்தி

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 06

Thumi202121

Leave a Comment