சமகால சர்வதேச உலகில் இன்று மனித உரிமைகள் என்ற பதம் முதன்மைப்படுத்தி நோக்கப்படுகின்றது. மனித உரிமை என்பது மனிதர்கள் மனிதனாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்கு கிடைத்த அடிப்படையான, விட்டுக்கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகள் ஆகும். அடிப்படை உரிமைகள் என்பது மனித உரிமைகளின் ஒரு பகுதியாகும். சமூக, பொருளாதார, அரசியல், குடியியல் உரிமைகள் என்று பல கோணங்களில் இருந்து மனித உரிமைகளை நோக்கினாலும் அவற்றில் மிகவும் இன்றியமையாதது மனிதனின் அடிப்படை உரிமை ஆகும். இவ் அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு நாடுகளும் தமது அரசியல் அமைப்பினூடாக வரையறை செய்துள்ளனர்.
இலங்கையை பொறுத்த மட்டில் குறுமக்கலம் யாப்பில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை, டொனமூரில் சர்வஜன வாக்குரிமை, சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மையினர் காப்பீடாக அறிமுகப்படுத்தப்பட்ட உரிமைகள் படிப்படியாக 1972, 1978 அரசியல் யாப்புக்களில் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் கொண்டுவரப்பட்டது.

இலங்கையில் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பில் வரையப்பட்டிருப்பினும் இலங்கையில் மனித உரிமைகள் ஆனது ஒரு கேள்விக்குறியாக காணப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் இலங்கையில் மனித உரிமை ஆனது பல்வேறு சவால்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவது ஆகும்.
இலங்கையில் மனித உரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களையும் பற்றி பார்க்கின்ற போது 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் வரையறுக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களில் உள்ள பலவீனங்கள் அதாவது 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் குறித்த சில உரிமைகளை கூறிவிட்டு ஏனைய முக்கியமான சில உரிமைகளை குறிப்பிடாத விட்டமை அவை உரிமைகள் இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. உதாரணமாக உயிர் வாழ்வதற்கான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை போன்றவை நேரடியாக கூறப்படாமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படை உரிமை மீறப்படின் தனிநபர் மாத்திரமே நிவாரணம் தேட முடியும் மாறாக நிறுவனமாகவோ அல்லது குழுவாகவோ அல்லது ஸ்தாபனமாகவோ நிவாரணம் தேட முடியாமை.
அடிப்படை உரிமை மீறல் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாத கால இடைவெளிக்குள் நிவாரணம் தேடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது இக்கால எல்லை நீடிக்கபட முடியாமை ஒரு முக்கிய குறைபாடாகும். இங்கே நிர்வாகத் துறையில் அடிப்படை உரிமை மீறல்களை மேற்கொள்பவர்கள் நிர்வாக கட்டமைப்புக்குள் இருப்பதினால் பலமானவர்களாகவும் மாறாக உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர் தனிநபராக இருப்பதனால் பலவீனமானவராகவும் காணப்படுகிறார் இந்நிலையில் ஒரு மாதம் என்ற கால எல்லையானது பலவீனமானவரை மேலும் பாதிப்பதாக அமைகின்றது.

அரச நிர்வாகங்கள் அல்லது அரச ஸ்தாபனங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டால் அன்றி தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்கள் அடிப்படை உரிமைகளை மீறும் போது அதற்கு நிவாரணம் பெற முடியாது இருத்தல்.
சட்டமா அதிபர் திணைக்களத்தை சார்ந்தவர்கள் அடிப்படை உரிமைகளை மீறுவோரின் சார்பில் ஆஜராகி வாதாடுவதானது அடிப்படை உரிமை மீறலை மேலும் மேலும் தூண்டுவதாக அமைவதோடு அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை பேணிப் பாதுகாக்காத தன்மையை குறிப்பாக அமைகின்றது.
மனித ரீதியிலான பரவலாக்கம் இல்லை. இலங்கையில் மனித உரிமை என்பது ஒன்று இருப்பதே சில பாமர மக்களுக்கு தெரியாத நிலை காணப்படுகின்றது இதனால் அவர்கள் உரிமை மேலும் மீறப்படுவதாலும் அவர்களது மனித உரிமைகள் சவாலுக்கு உட்படும் நிலை ஏற்பட இங்கு வழி சமைக்கும்.
இலங்கையில் தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும் மற்றும் முழுதாக அடிப்படை உரிமைகளை கேள்விக்கு உட்படுத்தி நடைமுறை சாத்தியமற்றதாகியுள்ளது.
ஒருவருடைய அடிப்படை உரிமை மீறப்பட்டால் அவர் உயர் நீதிமன்றத்திற்கு மாத்திரமே அதற்குரிய நிவாரணங்களை பெற முடியும் மாறாக ஏனைய நீதிமன்றங்களில் பெற முடியாது.
அரசு சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றி எதுவித கருத்துக்களும் உள்ளடக்கப்படவில்லை.
மனித உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனங்களின் சுறுசுறுப்பற்ற தன்மை.
மதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பதற்கான எந்த ஒரு நம்பகத் தன்மை உள்ள கட்டமைப்பும் இலங்கையில் இல்லை.
சர்வதேச குற்றங்களை எதிர்கொள்வதற்கு இலங்கையில் உள்ளூர் சட்ட வேலைப்பாட்டில் போதுமற்ற தன்மை.

போன்ற பல்வேறுபட்ட காரணங்களினால் இலங்கையில் சாதாரணமாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக இனவொதுக்கள் குற்றங்கள், அமைதிக்கு எதிரான குற்றங்கள், சாதாரணமான கடத்தல் செயல்பாடுகள்,காணாமல் போதல், கட்டாய ஆள் சேர்ப்பு, கூட்டுத் தண்டனை, இனப்படுகொலை என்கின்ற பல்வேறு விதமான மனித உரிமைகள் மீறல்கள் இலங்கை நாட்டில் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே இவ்வாறான ஒரு நிலமைனை இல்லாமல் ஆக்கி இலங்கையில் மனித உரிமை பேணிப் பாதுகாப்பதற்கு அரசு முயற்சிக்க வேண்டும் குறிப்பாக மனித உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனங்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், சகலரும் சமமான மனித மான்புடையவர் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும்,மனித உரிமைகள் பேணிப் பாதுகாப்பதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும், மத வழிபாட்டுத்தலங்கள், சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள் இப்பணிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மேலும் வலிமையான சிவில் சமூகங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும் மேலும் அரசியல் யாப்பில் உரிமைகள் தொடர்பான ஒரு தீர்க்கமான வரையறுக்கப்பட்டதாக நீண்ட சொற்கள் அற்றவிதமாக மாற்றி அமைக்க வேண்டும் இவரான பலமறுசீரமைப்புகளும் சீர்திருத்தங்களும் இலங்கை நாட்டுக்கு அவசியமாக காணப்படுகின்றது.
முடிவாக இலங்கையில் மனித உரிமை ஆனது ஓரளவு காணப்பட்டாலும் சிறுபான்மையினருக்கு அது முழுதளவில் கிடைக்கப்பெறுகின்றதா என்பது கேள்விக்குறிய விடயமே எனவே தற்காலத்திலும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி உரிமை மீறப்பட்ட குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான நிவாரணம் வழங்கி எதிர்காலத்தில் இலங்கையையும் மனித உரிமைக்கு எடுத்துக்காட்டான நாடாக விளங்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரு பேராசை காணப்பட்டாலும் எதார்த்தம் என்னவோ இலங்கையில் மனித உரிமை என்பது இனரீதியில் பாகுபாடு இருக்கும் வரை முன்னேற்றம் அடையும் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
1 comment