இதழ் 58

வினோத உலகம் – 23

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து 6 வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் ஒரு நாட்டின் மகிழ்ச்சி, சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியன கருத்திற் கொள்ளப்படுகின்றன.

இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களைக் (Fllowers) (400 மில்லியன் +) கொண்ட பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ். 380 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பெண்ணாக வலம் வந்த பாடகி கைலி ஜென்னரை பின்னுக்குத்தள்ளி செலினா கோம்ஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

உலகின் அதிக எடை கொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்து ஜப்பான் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.  உரம் மற்றும் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்யும் மாண்டா ஃபெர்மன்டேஷன் எனும் ஜப்பானிய நிறுவனம் இந்த உலக சாதனை படைத்துள்ளது.  இந்நிறுவனம் இதுவரை யாரும் பதிவு செய்யாத வகையில் 45.865 கிலோ கிராம் எடையும், 113 சென்டிமீட்டர் சுற்றளவு மற்றும் 80 சென்டிமீட்டர் நீளம் கொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்துள்ளது.

சாக்லேட்டை கொண்டு சமையல் கலைஞர் ஒருவர் மினி காரை உருவாக்கியுள்ளார்.அம்ரி குய்ச்சோன் எனும் சமையற்கலைஞர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக பேக்கரி உணவுகளை செய்வதில் வல்லவர். தற்போது சாக்லேட்டை கொண்டு மினி காரை வடிவமைத்துள்ளார். காரின் பாகங்களை சாக்லேட்டில் வரைந்து அதை கட் செய்து காரை அப்படியே வடிவமைத்துள்ளார். பிறகு அதன் மீது வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ளார். பார்ப்பதற்கு அப்படியே கார் போன்றே உள்ளது. இந்த வீடியோவுக்கு கீழ் ஹூண்டாய் நிறுவனம் கமெண்ட் பதிவிட்டுள்ளது. அந்த கமெண்டில், “இது ஒரு இனிமையான சவாரி” என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts

நீர் இன்றி அமையாது உலகு..!

Thumi202121

ஆடல் கலையே தேவன் தந்தது..

Thumi202121

இலங்கையில் இணையக்கல்வி

Thumi202121

Leave a Comment