துமி மின்னிதழ் 50 இதழ்களை கடந்து பயணிப்பதை முன்னிட்டு தமிழ்க் கல்விக்கூடம் குறோளி அனுசரணையில் இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் இடையே நடாத்தப்பட்ட “ஆய்வு அரசர்கள்” என்கிற ஆய்வுப் போட்டியில் எமக்கு கிடைக்கப்பெற்ற ஆய்வுகளில் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசில் பெறுகின்ற முதல் மூன்று வெற்றியாளர்கள்…
1. செல்வி. தெ. வஜிதா (முதலாம் இடம்)
2. செல்வி. ப. டியனி (இரண்டாம் இடம்)
3. செல்வி. ஜெ. சிவச்சித்ரா (மூன்றாம் இடம்)
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் கலாநிதி. செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் மற்றும் அதிபர் எஸ். சாந்தகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.
எமது மண் சார்ந்ததும் மக்கள் சார்ந்ததுமான இவர்களது ஆய்வுகள் துமி மின்னிதழில் தொடராக வெளிவருகிறது.




