இதழ் 58

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -02

ஆய்வின் முக்கியத்துவமும் தர்க்கரீதியான நியாயப்பாடும்

Covid- 19 நோய் தொற்று இன்று உலகளாவிய சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளதுடன் கல்வியில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். இதனால் இன்று உலகளவில் மாணவர்களின் கல்வி என்பது கேள்விக்குறியாகக் காணப்படுவதுடன் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு இணையத்தளங்களின் ஊடாக கல்வி வழங்கப்பட்டு தற்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வகையிலே குறித்த ஆய்வு பிரதேசத்தினை பொறுத்த வரையில் கொரோனா தொற்று என்பது சமூகப் பரவலாக காணப்படுகின்றது. அதே வேளை பாடசாலைகளும் மீளத் திறக்கப்பட்டுள்ளன. இவ் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தெளிவுஇ எவ்வாறு பரவலடைகின்றதுஇ அதில் இருந்து எம்மையும் பிறரையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வகுப்பறை நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை நிறுவுவது அவசியமாகின்றது. மாணவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும். எனில் கொரோனா குறித்த மாணவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கேட்டு அவர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்குவதன் ஊடாக கொரோனா குறித்த மாணவர்களின் உளப்பாங்குஇ நடத்தை என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உலகளவில் பெரும் சுகாதார சவாலாக மாறியுள்ள கொரோனா குறித்த ஆய்வு பிரதேசத்திலும் அதிகளவில் பரவுவதை தவிர்க்க மாணவர்களிடம் கொரோனா குறித்த மாணவர்களின் அறிகுறிகள்இ நடத்தைஇ உளப்பாங்கு என்பன மதிப்பீடு செய்யப்படுவது அவசியமான ஒன்றாகும்.

மேலும் வவுனியா வடக்கு ஓமந்தை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் அதிகமானவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருவதனால் கொரோனா குறித்த விளக்கத்தினைக் கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. கிராமப் புறங்களை பொறுத்த வரையில் அதிகளவான மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் விவசாய நடவடிக்கைகளின் போது அவர்கள் எந்தவிதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுவது இல்லை. மேலும் உள்;ர் பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் குறைவாகக் காணப்படுவதனால் மக்களிடம் கொரோனா குறித்த ஓர் கவனயீனம் ஏற்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக அதிகளவு மாணவர்களின் கொரோனா குறித்த அறிவுஇ நடத்தைஇ உளப்பாங்கு என்பன வேறுபடுகின்றது. கொரோனா வைரஸ் சமூகபரவலாக காணப்படுவதனால் அது குறித்த தெளிவான விளக்கத்தையும் அதற்கேற்ற நடத்தைஇ உளப்பாங்கு கொண்டவர்களாகவும் மாணவர்கள் காணப்படவேண்டியது அவசியமாகும். அதன்படி இவ் ஆய்வு குறித்த ஆய்வு பிரதேசத்தை பொறுத்த வரையில் அவசியமான ஒன்றாகும்.

மேலும் இவ்விடயம் குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் முன்னர் செய்யப்படவில்லை. எனவே அது குறித்த விழிப்புணர்வும் மாணவர்களிடம் போதியளவு காணப்படவில்லை. அத்துடன் இன்றைய கால கட்டத்தில் வவுனியா பிரதேசத்தை பொறுத்த வரையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்கின்ற நிலையில் மாணவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த புரிதலை மதிப்பிடுவது என்பது அவசியமாகின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் பாடசாலை மட்டத்தில் தீவிரமாக பரவுவதை குறைக்கவும் இனிவரும் காலங்களில் கொரோனா குறித்த புரிதலை மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற நோக்கில் இவ் ஆய்வு குறித்த ஆய்வுப் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.

ஆராய்வோம்…

Related posts

நீர் இன்றி அமையாது உலகு..!

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 07

Thumi202121

ஆய்வு அரசர்கள்-2022

Thumi202121

Leave a Comment