இதழ் 58

அளவெட்டியிலும் ஹாவாயிலும் ஒரே நேரத்தில் கும்பாபிடேகம்

யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவ யோகசுவாமிகளின் சீடரும் அமெரிக்க ஹாவாய் ஆதீன ஸ்தாபகருமாகிய குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகளுக்கு 1975ம் ஆண்டு சிவபெருமான் ஓர் அகக் காட்சி அருளினார். இந்த அகக் காட்சியின்படி புனித வைலுவ நதிக்கரையில் குருதேவர் ஓர் சுயம்பு லிங்கத்தை கண்டார். இச் சுயம்பு லிங்கத்தை மையமாக கொண்டு முற்றிலும் கருங்கற்களினால் ஓர் சிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த சிவாலயத்துக்கு ‘இறைவன் கோயில்” என குருதேவர் பெயரிட்டுள்ளார்.

இறைவன் கோயில் நுழைவாயிலில் ஓர் உருத்திராட்ச மரச்சோலை, இச்சோலையில் இருந்து கோயிலுக்கு இருமருங்கிலும் கொண்றை மரங்களை உடைய ஒரு நீண்ட நேரிய பாதை, இதை குருதேவர் ‘சன்மார்க்கம்” என அழைத்தார். இப்பாதையில் ஓர் ஆலமர நிழலில் விநாயக பெருமான் எழுந்தருளியுள்ளார். அவரிடம் விடை பெற்றுச் செல்லும் போது வழியில் ஓர் குன்றின் மேல் முருகப் பெருமான் வேல் வடிவில் தரிசனம் தருகிறார். அவரையும் தரிசித்து நேரே சென்றால் சுயம்பு லிங்க பெருமானை நாம் அடையலாம்.

108 வில்வ மரங்களுக்கு மத்தியில் வீற்றிருக்கும் சுயம்பு லிங்க பெருமானுக்கு 1975ம் ஆண்டு முதல் நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தசாப்தத்துக்கு மேலாக சுயம்பு லிங்க பெருமானுக்கு நித்திய பூசை செய்யும் பாக்கியம் ஆன்மீகச்சுடர். ரிஷி. தொண்டுநாத சுவாமிகளுக்கு கிடைத்தது.

சுயம்பு லிங்க பெருமானுக்கு இடது புறத்தில் இறைவன் கோயில் அமைந்துள்ளது. முழுக்கோயிலும் இந்தியாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்டு கப்பல்களில் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இப் பாரிய திருப்பணியை நிறைவேற்ற 33 வருடங்கள் எடுத்தன.

இறைவன் கோயிலில் ஆறு கோணங்களையுடைய, 1540 கிலோ எடையுள்ள, உலகின் மிகப்பெரிய ஸ்படிக லிங்கம் மார்ச் 26ம் திகதி (அமெரிக்க நேரப்படி) காலை 10.19 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதே முகூர்த்தத்தில் குருதேவரால் 1972ம் ஆண்டு அளவெட்டி ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பசுபதீஸ்வரர் திருக்கோவில் புதிதாக அமைக்கப்பட்டு பங்குனி 13ஆம் நாள் மார்ச் 27 (இலங்கை நேரப்படி) காலை 9.40 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யோகசுவாமிகளின் அருளணைப்படி ஈழத்திலிருந்து மேலைத் தேசத்துக்கு சைவ சமயத்தை எடுத்துச் சென்று ஆகம விதிப்படி கருங்கற்களினால் சிவாலயம் அமைத்த குருதேவர் சிவாய சுப்பிர்முனியசுவாமிகள் ஆசியாலும் ஆன்மீகச்சுடர். ரிஷி. தொண்டுநாத சுவாமிகளின் பெரு முயற்சியாலும் இத்திருப்பணிகள் நடைபெற்றன.

Related posts

வினோத உலகம் – 23

Thumi202121

இலங்கையில் இணையக்கல்வி

Thumi202121

நீர் இன்றி அமையாது உலகு..!

Thumi202121

Leave a Comment