இதழ் 59

யாழில் திடீர் பரிசோதனை

யாழில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பல வியாபாரிகளுக்குஎதிராக சட்ட நடவடிக்கை!


யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைகளத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 15 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை, நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களிலும் திடீர் பரிசோதனை மேற் மேற்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது

Related posts

பாட்டுப் பாடவா?

Thumi202121

சீர்படுத்தும் சிறைச்சாலை நூலகங்கள்

Thumi202121

சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை

Thumi202121

Leave a Comment