8 மாடிகள், 50000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் 6000 நோயாளிகள் தினசரி அணுகும் வசதியுடன் இலங்கையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சீன-எய்ட் திட்டமான (அன்பளிப்பு) இலங்கை தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டிடத்தின் பணிகள் யாவும் முடிவடைந்துள்ளமையால் இன்றைய தினம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது விரைவில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


