அதிகரிக்கும் வெயில் காலத்தில் மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகள்
- அதிகளவு நீர் அருந்துங்கள். குறைந்தது 5L – 3L
- வத்தகப்பழம், வாழைப்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு உண்ணுங்கள்.
- நன்னாரி, வில்வம்பூ, ஆவரசம்பூ குடிநீர்கள் குடியுங்கள்
- தோல்நீக்கி நன்கு கழுவிய கற்றாளை சாறு (juice), நாரைத்தோடை சாறு குடியுங்கள்
- காலையில் சிறிது வெந்தயம் நீருடன் உள்ளெடுங்கள்
- தேவையற்று வெயிலில் திரிவதை தவிருங்கள்
- இறுக்கமான ஆடைகளை தவிருங்கள்
- இயன்றவரை மரங்களுக்கு கீழ் இருங்கள்
- வீட்டு ஜன்னல்களை திறந்து வைத்திருங்கள்
- காரமான உணவுவகைகளைத் இயன்றவரை தவிருங்கள்.
- அஜினோமோட்டோ அதிகம் சேர்ந்த துரித உணவுகள், கொத்துரொட்டி என்பவற்றை தவிர்த்திடுங்கள்
- குழந்தைகள், சிறுவர்களில் அதிக கவனம் எடுங்கள்.
- தயிர், மோர், யோகட் அருந்துங்கள்
- பழஞ்சோற்று கஞ்சி, இலைக்கஞ்சி, பாற்கஞ்சி என நீராகாரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
கவிஞனின் வரிகள்
விளை நிலங்களை வேரறுத்து
விலை நிலங்களாக்கினோம்…
தருக்களை தகர்த்து
தளபாடங்கள் செய்தோம்..
ஓசிக்காற்றை ஓரம் கட்டி
அறை குளிர்ந்தது…
அறைக்கு வெளியே அனல் அல்லவா பறக்கிறது…