இதழ் 59

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரபலங்கள்

பிரபல ஆங்கிலத் திரைப்படமான பெட்மேன் பட நாயகன் Christian Bale சுற்றுப்பயணமாக ஏப்ரல் மாதம் 2023 இலங்கைக்கு வந்துள்ளார்.

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நுாலின் அறிமுக விழா 23.04.2024 காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

மண்டபம் நிறைந்த பாா்வையாளா்கள் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் நடிகா் திலகத்தின் மகன் ராம்குமாா் கணேசன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டாா்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியா் எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடக்கவுரையை இந்திய துணைத்துாதுவா் ராகேஷ் நட்ராஜ் நிகழ்த்தினார். இலங்கையுடனான இந்தியாவின் நெருக்கமான உறவு குறித்தும், யாழ்ப்பாணம் மூளாய் மருத்துவமனைக்கு 70 வருடங்களுக்கு முன்னா் சிவாஜி கணேசன் எவ்வாறு உதவினாா் என்பதையிட்டும் தனது உரையின் போது அவா் விளக்கினாா்.

அதனைத் தொடா்ந்து “நீங்கா நினைவில் சிவாஜி” என்ற தலைப்பில் பேராசிரியா் சி.சிவலிங்கராஜாவின் சிறப்புரை இடம்பெற்றது.

நுாலாசிரியா் அறிமுகத்தை சிவா பிள்ளை நிகழ்த்த, நுால் அறிமுக உரையை முனைவா் கா.வெ.செ.மருதுமோகன் நிகழ்த்தினார். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் சி.சிறீசற்குணராஜா நுாலை வெளியிட்டார். இதனைத் தொடா்ந்து ராம்குமாா் கணேசன் சிறப்புப் பிரதிகளை அதிதிகளுக்கு கையளித்தார்.

இதனைத் தொடா்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக இலங்கை, இந்திய பேச்சாளா்கள் பங்குகொண்ட பட்டிமன்றம் ஒன்றும் இடம்பெற்றது. செந்தமிழ்ச் சொல்லருவி லலீசன் இதற்குத் தலைமைதாங்கினார்.

அதோடு ராம்குமார் கணேசன் குழுவினர் சிவாஜி கணேசன் உதவி புரிந்த மூளாய் வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தார்.

விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஈழத்து கலைஞர்களுடன் இசை நிகழ்வொன்றில் 28.04.2023 கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பிரபல நடிகரான யாஷ் என அறியப்படும் நவீன் குமார் கவுடா படப்பிடிப்புகளுக்காக இலங்கைக்கு ஏப்ரல் மாதம் வந்துள்ளார்.

Related posts

கீரிமலையில் நாவலர்

Thumi202121

பாட்டுப் பாடவா?

Thumi202121

உழைப்பாளிகள் எல்லோருமே பங்காளிகள்

Thumi202121

Leave a Comment