இதழ் 59

சுட்டெரிக்கிறது வெயில்

அதிகரிக்கும் வெயில் காலத்தில் மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகள்

  1. அதிகளவு நீர் அருந்துங்கள். குறைந்தது 5L – 3L
  2. வத்தகப்பழம், வாழைப்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு உண்ணுங்கள்.
  3. நன்னாரி, வில்வம்பூ, ஆவரசம்பூ குடிநீர்கள் குடியுங்கள்
  4. தோல்நீக்கி நன்கு கழுவிய கற்றாளை சாறு (juice), நாரைத்தோடை சாறு குடியுங்கள்
  5. காலையில் சிறிது வெந்தயம் நீருடன் உள்ளெடுங்கள்
  6. தேவையற்று வெயிலில் திரிவதை தவிருங்கள்
  7. இறுக்கமான ஆடைகளை தவிருங்கள்
  8. இயன்றவரை மரங்களுக்கு கீழ் இருங்கள்
  9. வீட்டு ஜன்னல்களை திறந்து வைத்திருங்கள்
  10. காரமான உணவுவகைகளைத் இயன்றவரை தவிருங்கள்.
  11. அஜினோமோட்டோ அதிகம் சேர்ந்த துரித உணவுகள், கொத்துரொட்டி என்பவற்றை தவிர்த்திடுங்கள்
  12. குழந்தைகள், சிறுவர்களில் அதிக கவனம் எடுங்கள்.
  13. தயிர், மோர், யோகட் அருந்துங்கள்
  14. பழஞ்சோற்று கஞ்சி, இலைக்கஞ்சி, பாற்கஞ்சி என நீராகாரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்

கவிஞனின் வரிகள்

விளை நிலங்களை வேரறுத்து

விலை நிலங்களாக்கினோம்…

தருக்களை தகர்த்து

தளபாடங்கள் செய்தோம்..

ஓசிக்காற்றை ஓரம் கட்டி

ஏசிக்காற்றை ஏலம் எடுத்தோம்…

அறை குளிர்ந்தது…

அறைக்கு வெளியே அனல் அல்லவா பறக்கிறது…

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 08

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -03

Thumi202121

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரபலங்கள்

Thumi202121

Leave a Comment