இதழ் 60

யார் இந்த மதீஸ பத்ரன

இசைக் குடும்பத்திலிருந்து கிரிக்கெட்க்குள் நுழைந்திருக்கும் புதிய வரவு தான் மதீஸ பத்ரன. இலங்கையின் ஹாரிஸ்பத்துவ இல் வளர்ந்த பத்ரன தனது தந்தையினை போல் பியானோ வாசிக்க கூடியவர், ஆனால் இவரின் தாயாரும் இரு சகோதரிகளும் கிட்டார் கலைஞர்கள் .

“ஸ்விங் சுல்தான்” வாசிம் அக்ரம் போல், “வேகப் புயல்” பிரட் லீ போல் பந்து வீச வேண்டும் என்ற காலங்கள் இருந்தது. மாலிங்க வின் சிலிங் பாணியில் பந்து வீச இப்போது அதிகமானோர் முயற்சிக்கின்றனர். ஆனால் அது எல்லோருக்கும் கை கொடுக்கவில்லை. மதீஸ பத்ரன அதில் வெற்றி கண்டுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். மாலிங்க பந்தை விடுகின்ற/எறிகின்ற புள்ளிக்கு கீழாகவும்/ அதிக வேகத்திலும் பத்ரன பத்தினை விடுகிறார்/ எறிகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

கண்டியில் அமைந்துள்ள Trinity College இலிருந்து லகிரு குமார விலக அவர்களுக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்பட்டது. அதே நேரத்தில் இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ், கொழும்புக்கு அழைத்து இருந்தார். பெற்றோர்களுக்கு தமது பிள்ளை பிரிவது கடினமானதாக இருந்தால் சொந்த இடமான Trinity அவர்களுக்கு உகந்த முடிவாக இருந்தது. Trinity க்கான முதல் போட்டியிலே ஐந்து இலக்குகளை 11 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து வீழ்த்தினான் மதீஸ.

விரைவாக முன்னேறிய பத்ரனக்கு, இலங்கையின் 19வயது அணிக்காக 2020 மற்றும் 2022 உலக கிண்ண அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் அதில் வீசிய மணிக்கு 175 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசிய பந்து குறும் காணொளியாக தீயாய் பரவியது. அதே போல் 2021 இல் பத்ரன பந்துவீச இலக்குகளை சாய்க்கும் காணொளியும் பரவி இது இந்திய முன்னாள் அணித் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனியின் கையடக்க தொலைபேசி வரை சென்றது. இதனால் சென்னையின் வலைபந்து வீச்சாளர் ஆகும் வாய்ப்பு பத்ரனவுக்கு கிடைத்தது. இதற்கு, ஆரம்பத்தில் Trinity சம்மதிக்காவிடினும் இறுதியில் சம்மதித்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் கலக்கும் மதீஸ பத்ரன, அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பத்ரனவுக்கு இரு சவால்கள் பிரதானமாக காத்திருக்கிறது. இரண்டுமே அவரது பந்து வீச்சு பாணி சார்ந்தது தான். முதலாவது அவர் பந்தை வீசும் போது அவரது கை தோளுக்கு கிட்டத்தட்ட சரி நேராக உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பேசு பொருளாகியுள்ளது. ஏனெனில், தோளுக்கு சற்று கீழே சென்றால் முறையற்ற பந்தாக மாறும். இது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வலையொளியில் கருத்து தெரிவித்துள்ளார்.


இரண்டாவது இந்த பாணியில் வீசுவதால் ஏற்படும் உபாதைகள் தொடர்பானது. மகேந்திர சிங் தோனியும் இதை கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ரி20 மற்றும் உலக கிண்ண தொடர்களில் மட்டும் விளையாடலாம் என்று கூறியுள்ளார். இதற்கு நேர்எதிர்மாறாக லசித் மாலிங்க, தான் இவ்வாறான பந்து வீச்சு பாணியுடன் 16 வருடங்கள் கிரிக்கெட் ஆடியுள்ளேன் ஆறு வருடங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளேன் என்று பத்ரனவையும் டெஸ்ட் போட்டியில் விளையாடலாம் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தற்போது இந்தியாவின் பும்ராக்கு ஏற்பட்டு இருக்கும் உபாதைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

இவற்றை எல்லாம் எவ்வாறு கடந்து பத்ரன சாதிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மதீஸ பத்ரன சிறப்பாக செயல்பட துமியின் வாழ்த்துகள்.

Related posts

சமூகத்தை ஆற்றுப்படுத்தும் துமி

Thumi202121

பயணங்கள் முடிவதில்லை

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -04

Thumi202121

Leave a Comment