இதழ் 60

வினோத உலகம் – 25

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த பைபிள், இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள யூத மக்களின் அருங்காட்சியகத்துக்கு பரிசாக வழங்கப்படும் என்று சோதேபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1994-ம் ஆண்டு லியொனார்டோ டாவின்சியின் கோடெக்ஸ் லீசெஸ்டர் கையெழுத்து பிரதி 30.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதை ஹீப்ரு பைபிள் முறியடித்தது. இதன்மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட மிக மதிப்பு மிக்க கையெழுத்து பிரதி என்ற சாதனையை படைத்தது.

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் சுற்றிப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜேமி மெக்டொனால்ட் என்ற அந்த நபர், முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார். அதன்பின்னர் இந்தியா வந்து தாஜ் மஹாலை பார்த்தார். ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார். இந்த சாதனையை செய்து முடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரெயில்கள், 16 டாக்சிகள் மற்றும் ஒரு டோபோக்கன் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார்.

2025ம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் வாகனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் மற்றும் டிக்கெட் விற்பனையாளர் என இரண்டு பணியாளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கே மைக்கல்சன் என்பவர் பீரால்(Beer)  இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த பைக்கிற்கு எரிபொருளுக்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக வெப்பமூட்டும் சுருளுடன் (coil) 14-கேலன் கெக் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த சுருள் பீரை 300 டிகிரி வரை சூடாக்குகிறது. பின்னர் அது பைக்கை முன்னோக்கி நகரச் செய்யும் முனைகளில் அதிக வெப்பமான நீராவியாக மாறி இயக்குகிறது.

மின்சாரத்தில் இயங்கும் கார் ரஸ்ய நாட்டின் ATOM நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2025ம் வருடம் விற்பனைக்கு வரவுள்ள இக் கார் இப்பொழுது மக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது..

7விநாடிகளில் 100கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடக்கூடிய இக் கார்கள் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 500கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய வகையிலும் தானாக இயங்கக்கூடிய வசதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ் வருடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மின்சார கார்களில் அதிக வரவேற்பை பெற்ற காராக இவை மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சித்திராங்கதா -57

Thumi202121

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

Thumi202121

சமூகத்தை ஆற்றுப்படுத்தும் துமி

Thumi202121

Leave a Comment