இதழ் 60

தமிழ்நாட்டில் இருந்து துமிக்கு அன்பு வாழ்த்து

நமது அன்பிற்கினிய இளைஞர்கள் ஒருங்கிணைந்து, ‘துமி’ என்னும் பெயரில் மின்னிதழ் நடத்தி வருவது, நாம் அனைவரும் அறிந்ததே.

வசதிக்குறைவுகளும், வாழ்க்கை ஓட்டமும் மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கின்றன. எனினும், சாதிக்க வேண்டும் என்னும் முனைப்பு காரணமாகவும், கொள்கை உறுதி காரணமாகவும், நமது இளைஞர்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது செயல்கள் மிகவும் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியன.

துமி இதழில் இடம்பெறும் செய்திகள் அனைத்தும், மொழி மற்றும் இனம் சார்ந்த கருத்துகளாகவும், மண்ணின் பெருமைகளைப் பேசுவனவாகவும் இருப்பதுடன், அறிவியல், சட்டம், வரலாறு, கதைகள், கவிதைகள் போன்ற பல்துறை சார்ந்ததாகவும் இருப்பது மிகவும் சிறப்பு.

மிக அழகிய படங்களைத் தேர்வு செய்து இதழுக்குப் பயன்படுத்துவது, இதழின் பெருமைக்கு மகுடம் சூட்டுவதாக அமைகிறது.

இப்போது அறுபதாவது இதழ் வெளிவருவதாக அறிகிறேன்; பெருமை கொள்கிறேன். இளைஞர்களின் அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து வெற்றிபெற அன்பான வாழ்த்துகள்!

Related posts

இலங்கை செய்திகள்

Thumi202121

பாட்டுப் பாடவா? – சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரே

Thumi202121

யார் இந்த மதீஸ பத்ரன

Thumi202121

Leave a Comment