தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர், கலாநிதி.ஆறு.திருமுருகன் பிறந்த நாள் அற நிதியச் சபையின் இந்த ஆண்டிற்கான இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது இன்று தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெற்றது.

கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களது 62வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு அ.சிவபாலசுந்தரம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானத்துறை பீடாதிபதி பு.ரவிராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் மற்றும் சமூகப் பெரியவர்கள் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விருது வழங்கும் விழாவில் வைத்திய கலாநிதி வேலாயுதப்பிள்ளை அவர்களும் சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பிறேமினி பெண்ணம்பலம் அவர்களும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

