இதழ் 60

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -04

ஆய்வின் மட்டுப்பாடுகள்

தற்போது நிலவி வருகின்ற கொவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக பாடசாலைக்குச் செல்வதற்கு உரிய காலப்பகுதியில் அனுமதி கிடைக்காமை. போக்குவரத்து வசதிகள் இல்லாமையினால் போக்குவரத்தில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததுடன் தகவல் களையும் விரைவாகப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. எனவே தகவல்களைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. கலைப்பிரிவு மற்றும் வணிகப்பிரிவு மாணவர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விஞ்ஞான மற்றும் கணிதப்பிரிவு மாணவர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை.

தரவுப்பகுப்பாய்வு

ஆய்விற்காக வவுனியா வடக்கிலுள்ள க.பொ.த உயர்தரப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் 101 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு இவ் ஆய்வானது அளவுசார், பண்புசார் ஆய்வு முறையியல் நுட்பங்களினை இணைத்து கலப்புமுறையினைப் (mixed method) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை விபரணப் புள்ளிவிபரவியல் முறையிலும் பண்புசார் தரவுகள் கருப்பொருள் ரீதியான தரவுப் பகுப்பாய்விற்கும் உட்படுத்தப்பட்டது.

ஆய்விற்குட்படுத்தப்பட்ட 101 மாணவர்களில் 42.6% ஆனவர்கள் ஆண்களாகவும் 57.4% ஆனவர்கள் பெண்களாகவும் காணப்படுவதுடன் இவர்களில் 80.2% ஆனவர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்களாகவும் 19.8% ஆனவர்கள் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

வருமானம் குறித்து பார்க்கின்ற போது ஆய்வுக்கு ட்படுத்தப்பட்ட மாணவர்களில் 28.7% ஆனவர்கள் வாரம் ஒன்றிற்கு 1001-1500 ற்கு இடைப்பட்ட வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் 14.9% ஆனவர்கள வாரம் ஒன்றிற்கு 1000ற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருப்பதுடன் 8.9% ஆனவர்களே வாரம் ஒன்றிற்கு 3000ற்கும் அதிகமான வருமானத்தை பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். ஏனைய மாணவர்கள் 1500-3000 வரையிலான வருமானத்தை பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் 49.5% ஆனவர்கள் சொத்து மூலமான வருமானத்தை பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் 38.6% ஆனவர்கள் ஏனைய வருமானம் பெறுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இதில் வாரம் ஒன்றிற்கு 3000ற்கும் குறைவான வருமானம் பெறுபவர்களே அதிக சதவீதத்தினராக இருக்கின்றனர். இவ்வாறான குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்த அடிப்படை விளக்கத்தை கொண்டிருப்பினும் அதற்குரிய பாதுகாப்பு பொறிமுறைகளை பின்பற்றக் கூடிய நிலையில் காணப்படவில்லை.

ஆராய்வோம்…

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 09

Thumi202121

சமூகத்தை ஆற்றுப்படுத்தும் துமி

Thumi202121

இலங்கை செய்திகள்

Thumi202121

Leave a Comment