யாழ்ப்பாணம் கோண்டாவிலில் நெசவு மின்தறி இயந்திரங்கள் மூலம் உடைகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஒன்று யாழ்.மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கமாக இயங்குகின்றது.
இங்கு சாறி, வேட்டி, சறம், பெட்சீட், கைக்குட்டை , கட்டில்களுக்கான துணிகள், துவாய் என பல உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையால் இங்கு பல கோடிக்கணக்கு பெறுமதியான இயந்திரங்கள் தற்போது இயக்கமுடியாத நிலையிலும் ஒரு பகுதி இயந்திரங்கள் மூலம் சில பணியாளர்களை இணைத்து உற்பத்தி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் வைத்தியசாலைகள், அரச தனியார் திணைக்கள ஊழியர்களுக்கு என வழங்கப்பட்டு வருகின்றன.
தொழில்துறையில் உள்ள புலம்பெயர்ந்தோர் என வணிகத்துறையினர் இதில் முதலிட்டால் இந்த பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் தொழிற்சாலையினை மேலும் வளர்ச்சிபெறச் செய்ய முடியும்.
நன்றி:- செ.நிருஜன்
1 comment