யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் தனியார் ஒருவரின் முதலீட்டில் ஆணிகள் உற்பத்தி தொழிற்சாலையொன்று திறக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையானது கடந்த June-1 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையிலையே இரயில் பெட்டிகளை உருவாக்கவுள்ள நிறுவனம்.. ரோமானியன் மற்றும் S8 ரயில் பெட்டிகளை புத்தாக்கம் செய்யும் “தந்திரி நிறுவனம்” தெரிவிப்பு. தெமட்டகொடையில் அமைந்துள்ள தந்திரி நிறுவனத்தின் தொழிற்சாலையில் ரெமேனியன் மற்றும் s8ரயில் பெட்டிகள் புதிப்பிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் பெறுமதிமிக்க ரயில் பயணிகளுக்கு சிறந்த மற்றும் உயர்தர ரயில் பெட்டிகளை வழங்குவதே எங்கள் நோக்கம் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் 100% இலங்கையிலையே இரயில் பெட்டிகளை தயாரிக்கக்கூடிய திறன் எம்மிடமுள்ளது என்றும் தந்திரி நிறுவனம் தெரிவித்துள்ளது..



யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் விமான சேவை நிறுவனமான Alliance air indiaவுடன் இனைந்து யாழ் மற்றும் ரத்மலானை விமான நிலைய செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான அலையன்ஸ் விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை அதிகரிப்பது மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆரயப்பட்டது. அலையன்ஸ் ஏர் இந்தியா குழு இந்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததுடன் மேலும் விமான நிறுவனம் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது..
