இதழ் 61

கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2023

கடந்த மூன்று கிரிக்கெட் உலக கிண்ண தொடர்களில் தொடரை நடாத்திய நாடுகளே கிண்ணத்தை வென்ற நிலையில், வருகிற ஒக்டோபர் 5ம் திகதி 2023க்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகிறது; இதன் இறுதி போட்டி நவம்பர் 19 நடைபெறும். இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் மிதமுள்ள இரு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்யும் தொடர், சிம்பாப்வே நாட்டில் இடம்பெற்று வருகிறது; இது வருகிற யூலை 7ம் திகதி நிறைவு பெறவுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையும் கடந்த யூன் 27ம் திகதி அறிவித்துள்ள நிலையில் இத்தொடர் 10 மைதானங்களில் இடம்பெறவுள்ளது; அவை தொடர்பான விபரங்களுடன் இந்த கட்டுரை.

(1) எம். சின்னசுவாமி ஸ்டேடியம் – பெங்களூரு
1969 இல் உருவான இந்த அரங்கு கர்நாடக மாநிலத்தில் உள்ளது. 1977 – 1980 காலப்பகுதியில் இந்திய கிரிக்கெட் சபை தலைவராக இருந்த மங்களம் சின்னசுவாமி அவர்கள் கர்நாடக கிரிக்கெட்க்கு செய்த 40 வருடகால அர்ப்பணிப்புக்காக அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்மைதானத்திற்க்கு தேவையான மின்சாரம் சூரிய சக்தியில் இருந்து அதிகளவாக தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இங்கு ஐந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அவற்றில் நான்கு பகலிரவு போட்டிகள் ஆகும்; அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டிகள் கவனிக்க கூடியவையாக இருக்கின்றன.

(2) இமாசலப் பிரதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – தர்மசாலா
கண் கவரும் மைதானமாக கடல் மட்டத்திலிருந்து 1317 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த ஸ்டேடியம் 2005 இல் உருவாக்கப்பட்டது. 23000 பேர் கண்டு களிக்க கூடிய இந்த மைதானத்தில் எடுக்கப்படும் படங்கள் அடிலெய்ட் ஓவல் மற்றும் நியுலென்ட் மைதானங்கள் போன்று அழகானவை. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதும் கூட. இந்திய – நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து போட்டிகள் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக உள்ளது; இங்கும் ஐந்து போட்டிகள் நடைபெறவுள்ளது (அதில் மூன்று பகலிரவு போட்டிகள்).

(3) ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியம் – ஐதராபாத்
விசாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்றும் அழைக்கப்படுகிற இந்த மைதானம் 16 ஏக்கர் பரப்பளவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
சின்னசுவாமி ஸ்டேடியம் போன்று அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் ஆடுகளம் ஆகும். இங்கு மூன்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பயிற்சி போட்டிகளும் நடைபெறும் மைதானங்களில் ஒன்றாகவுள்ளது.

(4) மகாராட்டிர கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம் – பூனே
கடந்த உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது இந்த மைதானமே இந்தியாவில் இல்லை; அதன் பின்னரே உருவானது. இதுவரை வெறுமனே ஏழு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே இங்கு நடைபெற்றுள்ளன. நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் ஐந்து போட்டிகள் நடைபெறுகின்றன; இதில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து இடையேயான போட்டி எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாகவுள்ளது. அதிகளவான ஓட்டங்கள் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.

(5) பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் எக்னா கிரிக்கெட் ஸ்டேடியம் – லக்னோ
இதுவும் 2017 இல் உருவான ஒரு புதிய மைதானம்; இங்கு இதுவரை வெறுமனே நான்கு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே நடந்துள்ளன; இந்திய அணி கடந்த 2022 இல் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற மைதானமும் கூட; இதை விட அங்கு மற்றைய மூன்று போட்டிகளும் ஆப்கானிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான போட்டிகளாகும். ஆனால் இந்த உலகக் கிண்ணத் தொடரின் ஐந்து போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றில் இந்திய – இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா போட்டிகள் மிகவும் முக்கியமான இரு போட்டிகளாக உள்ளன.

மிகுதி ஐந்து மைதானங்களும் அடுத்த இதழில்….

Related posts

முன்னாள் காட்டு ராஜா பேசுகிறேன்

Thumi202121

வட்டுக்கோட்டையில் பாட்டா உற்பத்தி நிலையம்

Thumi202121

விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்

Thumi202121

Leave a Comment