இதழ் 61

முன்மாதிரியான செயற்பாடு

கிளி/செல்வாநகர் அ.த.க. பாடசாலை மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


கடந்த இரு வருடங்களாக க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்கள் இறுதி நாள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலைக்கு வந்து அதிபர், ஆசிரியர்களைச் சந்தித்த பின் பாடசாலையை வணங்கி நன்றி செலுத்தியுள்ளார்கள். மாணவர்களின் நடத்தைக்கோலங்கள் விமர்சனத்திற்குள்ளாகி வரும் இன்றைய காலத்தில் தொடர்ச்சியாக இருவருடங்களாக மாணவர்களின் இந்த நன்றியுணர்வு மிக்க செயற்பாடு பாராட்டிற்குரியது. இவர்களை நெறிப்படுத்தும் அதிபர் ஆசிரியர்களுக்கும் துமியின் அன்பு வணக்கங்கள். ஏனைய பாடசாலைகளிலும் இவ்வாறான நல்ல பழக்கவழக்கங்களை மாணவர்கள் பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும்.

Related posts

என்ரை ஐயோ…!

Thumi202121

அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு மனநோய் குறித்த சமூக பார்வை காரணமா?

Thumi202121

விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்

Thumi202121

Leave a Comment