இதழ் 61

இந்தியாவில் மிகப்பெரிய இரயில் விபத்து

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளதாக அறியமுடிகிறது.

ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியன விபத்தில் சிக்கியுள்ளன..

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தனர்.

அச் சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியால் குறித்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

சென்னை நோக்கி வந்த இரயில் என்பதால் அதிகளவு தமிழர்கள் பயணம் செய்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

விபத்தில் பலியான உயிர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அவர்களின் உறவுகளின் துயரில் துமியும் பங்குகொள்கிறோம்.

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 10

Thumi202121

வினோத உலகம் – 26

Thumi202121

முன்மாதிரியான செயற்பாடு

Thumi202121

Leave a Comment