இதழ் 61

வினோத உலகம் – 26

பூமிக்கு அப்பால் வளர்ந்த முதல் பூ – நாசா வெளியிட்ட புகைப்படம். விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையானது 2015இல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டது. இதன் பூ எப்போதோ மலர்ந்துவிட்ட பொழுதும், இரண்டு நாட்களுக்கு முன் நாசாவின் உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராமில் மீள் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, செம்மஞ்சள் வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலர் என மீண்டும் வைரலாக ஆரம்பித்துள்ளது.

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேவேளையில் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. செயற்கை இறைச்சிக்கு அனுமதி அளிக்கக்கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இந்நிலையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோழி உயிரணுக்களில் இருந்து நேரடியாக வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதிக்கும் 2-வது நாடு அமெரிக்கா ஆகும். ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஈட் ஜஸ்ட் நிறுவனம், சிங்கப்பூ ரில் செற்கை இறைச்சியை விற்கிறது. விலங்குகள் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் இந்த வகை இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி என்று வகைப்படுத்தப்படுகிறது. கோழியின் செல்களை பிரித்தெடுத்து அவற்றுடன் சில சத்துப் பொருள்களை கலந்து ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகிறது. இது தொடர்பாக அப்சைடு புட்ஸ் நிறுவன தலைவர் உமா லவேட்டில் கூறும்போது, “அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு ஒப்புதல் அளித்து இருப்பது இறைச்சியை நமது மேஜையில் சேர்க்கும் விதத்தை மாற்றும். இது மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் படியாகும். வாழ்க்கையை பாதுகாக்கும் ஒன்று” என்றார்.

கடலில் மூழ்கிய “டைட்டானிக்” கப்பல் பாகங்களை காண்பதற்காக  சமீபத்தில், “ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்” எனும் ஆழ்கடல் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான “டைட்டன்” என்ற நீர்மூழ்கிக்கப்பலில் 5 பேர் சென்றனர்.  நீண்ட தேடலுக்கு பிறகு அக்கப்பல் வெடித்து சிதறி இருப்பதாகவும் அதில் பயணித்த பாகிஸ்தானைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஷேசாதா தாவூத், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி (488 மீட்டர்) தொலைவில் ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பலின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் ஷேசாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத்துடன், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் “ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்” நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோரும் கப்பலில் இருந்தனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது. அங்குள்ள வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு தான் உருண்டை வடிவ முட்டையை கண்டுள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் உடனே அந்த முட்டையை வாங்கிய அவர் இதுபோன்ற வடிவில் வேறு எங்காவது முட்டைகள் இருக்கிறதா என கூகுளில் தேடிப்பார்த்துள்ளார். அப்போது 10 லட்சத்தில் ஒன்று தான் இதுபோன்ற வடிவில் இருக்கும் என தெரியவந்துள்ளது. கடைசியாக இது போன்று கிடைத்த ஒரு முட்டை இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சத்திற்கு விற்பனையாகி இருப்பது தெரியவந்தது. 

கடந்த 11ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 3x3x3 ரூபிக்ஸ் கியூப் புதிருக்கு மிக வேகமாக தீர்வு கண்டு, “ஸ்பீட்கியூபிங் லெஜண்ட்” என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயதான மேக்ஸ் பார்க் உலக சாதனை புரிந்தார். ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974ம் வருடம், “மேஜிக் கியூப்” என்று அழைக்கப்படும் ஒரு புதிர் விளையாட்டை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் பிரபலமான, மூளைக்கு சவால் விடும் ஒரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்துவதே இந்த ரூபிக் கியூப் விளையாட்டு. மாறி மாறி உள்ள கனசதுர கட்டங்களை வேகமாக ஒழுங்குபடுத்துவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அனைத்து வயதினரும் சாதனைகளை படைத்துவருகின்றனர்.

உலகில் மிகவும் அழகான விமான நிலையம் Bao’an International Airport. 2023ம் ஆண்டுக்கான உலகின் மிகவும் அழகான விமான நிலையங்கள் வரிசையில் முதலிடத்தை சீனாவின் Bao’an International Airport பெற்றுள்ளது.

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -05

Thumi202121

அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு மனநோய் குறித்த சமூக பார்வை காரணமா?

Thumi202121

முன்னாள் காட்டு ராஜா பேசுகிறேன்

Thumi202121

Leave a Comment