இதழ் 62

கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2023 – 2

(6) ஈடன் கார்டன் மைதானம் – கொல்கத்தா
1996 உலகக் கிண்ண இலங்கை-இந்திய அரையிறுதியில் நடைபெற்ற வெட்கக்கேடான நிகழ்வால் ஆட்டம் நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. இருந்தும் இந்த மைதானம், பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு புனித யாத்திரையாக மாறியுள்ளது, விளையாட்டில் மிகவும் ஆர்வமுள்ள மற்றும் குரல் கொடுக்கும் ரசிகர்களுக்கு முன்னால் தங்கள் திறமைகளை காட்ட இது ஒரு வாய்ப்பு ஆகும். இம்முறையும் இந்த மைதானத்தில் தான் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. 2011 உலகக் கிண்ணத் தொடருக்காக மீள் உருவாக்கப்பட்டது. ஆனால் இவ் வேலைகள் நிறைவடையாமையால் இந்திய இங்கிலாந்து இடையேயான போட்டி மாற்றப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை இந்திய – தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையேயான போட்டிகள் உட்பட்ட நான்கு குழுநிலை ஆட்டங்கள் இங்கு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

(7) வான்கடே மைதானம் – மும்பை
உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியை நடாத்திய இந்த மைதானத்தில் இம்முறை முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன் இலங்கை இந்தியா இடையேயான போட்டி உட்பட நான்கு குழுநிலை ஆட்டங்கள் இங்கு நடைபெறும். வான்கடே ஸ்டேடியத்தின் அமைவு கடலோர இடம் என்பதால், கடல் காற்று வீசும் போது ஸ்விங் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான உதவி கிடைத்தது. இருப்பினும், 2011 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஸ்டாண்டுகள் மீண்டும் கட்டப்பட்ட போது, இந்த விளைவுகள் ஓரளவு குறைக்கப்பட்டது. ஆடுகளம் பாரம்பரியமாக ஓட்டங்கள் குவிப்பால் நிரம்பியது, ஆனாலும் சிவப்பு மண் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சில உதவிகள் இருப்பதை உறுதி செய்யும். மும்பை கிரிக்கெட் வீரர்களான விஜய் மெர்ச்சன்ட், சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரால் வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டுகள் உள்ளன.

(8) அருண் ஜேட்லி ஸ்டேடியம் – டெல்லி
இந்திய தலைநகரில் இருக்கும் இந்த மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை தலா இரு போட்டிகளை இங்கு ஆடுகின்றன. சுழற்பந்து வீச்சாளர்களில் தங்கியிருக்கும் இந்த இரு அணிகளுக்கும் சாதகமாக அமையலாம்.

(9) எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் – சென்னை
1916 ஆம் ஆண்டு பிரசிடென்சி போட்டிகள் தொடங்கியதில் இருந்து தமிழ் நாடு மாநிலத்தில், கிரிக்கெட்டின் ஆன்மீக இல்லமாக விளங்குகிறது. இதன் போட்டித் தன்மையான ஆடுகளங்களுக்கு பெயர் பெற்றது. பொதுவாக சேப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. சேப்பாக்கத்தில் தனித்துவமானது என்னவென்றால், நாட்டிலேயே மிகவும் அறிவார்ந்த மற்றும் பாராட்டக் கூடிய ரசிகர் கூட்டமும் சூழ்நிலையும் ஆகும். 1997ல் நடந்த சுதந்திரக் கோப்பைப் போட்டியில் சயீத் அன்வார், இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் எடுத்து சாதனை படைத்த போதும், 1999ல் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற போதும் அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தபோது இது நிரூபணமானது. இங்கு ஐந்து போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதிக்கொள்ளும் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியாகவுள்ளது.

(10) நரேந்திர மோடி ஸ்டேடியம் – அகமதாபாத்
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு களிக்க கூடிய உலகின் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக மிளிர்கின்ற இந்த மைதானத்தில் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி (இங்கிலாந்து – நியூசிலாந்து), பரமவைதிரிகளுக்கிடையேயான போட்டி (இந்தியா – பாகிஸ்தான்), ஆஷஸ் வைதிரிகளுக்கிடையேயான போட்டி (அவுஸ்திரேலியா – இங்கிலாந்து) மற்றும் இறுதிப் போட்டி என இவ் உலக கிண்ண தொடரின் பல முக்கியமான ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்த மைதானத்தின் இருமுனைகளான அதானி பவிலியன் மற்றும் ஜியோ, இந்தியாவின் இரு பெரும் வணிகர்களை குறிக்கிறது.

Related posts

சித்திராங்கதா -57

Thumi202121

கடுமையான தண்டனைகள் தேவை

Thumi202121

வினோத உலகம் – 27

Thumi202121

Leave a Comment