இதழ் 62

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -06

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாத பொழுதிலும் தடுப்பூசி குறித்த அச்ச உணவர்வுடையவர்களாக காணப்படுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 89.1% ஆன மாணவர்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பதாக கூறியிருப்பதுடன் அவர்களிம்; பெற்றுக்கொள்ளபட்ட கருத்துக்களின் படி முக கவசம் அணிதல் , சுய பரிசோதனை செய்து கொள்ளல், பொது இடங்களுக்கு முக கவசம் அணிந்து செல்லல், கை கழுவுதல், இருமல், தடுமல் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறாது இருத்தல், காச்சல் இருப்பின் வைத்திய சாலைக்கு செல்லுதல், இடைவெளிகளை கடைப்பிடித்தல், கையுறைகளை அணிதல், சட்டதிட்டங்களை பின்பற்றுதல், சுய தனிமைப் படுத்திக்கொள்ளல் என்பவன பொதுவான தடுப்பு நடவடிக்கைகளாக குறிப்பிடிருக்க காணலாம். இதனைப் பண்புசார் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

‘பாடசாலையில் கடைப்பிடிக்கின்ற சுகாதாரம் சார் விதிமுறைகள் ஏனைய மாணவர்களால் கடைப்பிடிப்பதில்லை. இதனால் அவர்களும் தொற்றுக்குள்ளாகிற நிலை இருக்கிறது. தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான சரியான தெளிவின்மையாலும் எங்கட பெற்றோர்கள் அதையும் விரும்ப மாட்டினம். தற்போது ஏனைய வயதுப்பிரிவினருக்கு ஊசி போடப்பட்டாலும் மாணவர்கள் மத்தியில தடுப்பூசி தொடர்பான அச்ச உணர்வு காணப்படுவதோட பெற்றோர்களிற்கும் அது தொடர்பான விளக்கமின்மையே பிரதானமான காரணமாகக் காணப்படுகுது.” (விடய ஆய்வு-10)

எனவே மாணவர்கள் மத்தியிலான கொரோனா நோய்த்தொற்று தொடர்பிலான விழிப்புணர்வுசார் நடவடிக்கைகள் மற்றும் அறிவுஇ உளப்பாங்கு மற்றும் நடத்தையினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் ஊடாக இவ் பாரியளவிலான நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுக் கொள்வதோடு எம்மையும் எமது சமூகத்தினையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

‘கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் மத்தியிலான கொரோனா பற்றிய அறிவுஇ உளப்பாங்குஇ நடத்தை தொடர்பான ஓர் மதிப்பீடு” என்னும் ஆய்வினது கலந்துரையாடலானது, ஆய்வு வினாக்கள் மற்றும் ஆய்வின் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு, ஏற்கனவே மேற்கொள்ளபட்ட ஆய்வுகளான, துயபயதநநவ. Jagajeet. P.S, Anshuman.S, Etal- [2020] என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்து மாணவர்களின் அறிவு, உளப்பாங்கு, நடத்தை என்பவற்றை தீர்மானிக்கும் காரணிகளாக சமூக ஊடகங்களின் செல்வாக்குஇ சமூகக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சுகாதார அலகுகள், முன்னணி தொழிலாளர்கள், சமூக தலைவர்கள் என்பவற்றை கூறுகின்றனர். 83 சதவீத மாணவர்கள் ஊடகங்களின் ஊடாக தரவுகளை மேற்கொள்வதாகவும் , 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் குடும்ப உறுப்பினர்கள்இ நண்பர்கள் மூலமும் 1/3 பங்கினர் சுகாதார அலகுகள் மூலமாகவும் தமக்கான கொரோனா வைரஸ் தொற்று குறித்த தரவுகளை பெற்றுக் கொண்டதாகக் கூறுகின்றனர்.

இதனைக் குறித்த ஆய்வு பிரதேசத்துடன் ஒப்பிட்டு பார்க்கின்ற போது நண்பர்கள், சமூக கட்டுப்பாட்டு செயற்பாடுகள், சுகாதார அலகுகள் என்பவற்றில் இருந்து கொரோனா வைரஸ் குறித்து தெரிந்து கொள்வதனை விட தமது பெற்றோர்கள் மற்றும் ஊடகங்களின் அடிப்படையாகவே அதிகளவு தரவுகளை மேற்கொள்கின்றனர். ஊரடங்கு சட்டங்கள் மேற்கொள்ளபடுகின்ற போதும் அது கொரோனாவின் பாதிப்பிற்குட்பட்ட இடங்களை மட்டும் முடக்குவதனால் ஏனைய பிரதேசத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அதேவேளை அன்றைய நிலையில் ஊடகங்களின் ஊடாக கற்கை நடவடிக்கைகள் இடம்பெறுவதனால் அதிகளவு மாணவர்கள் சமூக ஊடகங்களுடன் அதிகளவு தொடர்புபடுத்தப்படுகின்றனர். அத்துடன் இங்கு வாழும் மக்கள் விவசாயம் செய்கின்ற போதும் அதிகளவு மாணவர்களின் பெற்;றோர்கள் நகரங்களிற்கும் வெளியிடங்களுக்கும் வேலைக்கு செல்வதனால் அவர்களுக்கு கொரோனா குறித்த புரிதல் ஏற்படுகின்றது. இதன்படி ஆய்வாளரின் கருத்துக்கள் குறித்த ஆய்வு பிரதேச கருத்துக்களுடன் ஓத்து போகின்றது.

Zhong.B.L, Luo.w, etal –[2020] என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்து 40 சதவீதமானோர்களில் கொரோனா வைரஸ் குறித்த சிறந்த அறிவினைடக் கொண்டவர்களாகவும் 60 சதவீதமானவர்கள் குறித்த அளவான அறிவினைக் கொண்டதாகவும் காணப்பட்டனர். காய்ச்சல்இ இருமல்இ மூச்சுத்தினறல் மற்றும் சுவாச கஸ்டங்கள் Covid-19 இல் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை பற்றியும் 92 சதவீதத் தடுப்பு ஊசிகளின் கிடைப்பனவு குறித்தும் அறிந்திருந்தனர் எனக் கூறுகின்றார். இதனைக் குறித்த ஆய்வுப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இணையவழிக் கற்கைக்காக சமூக வலைத்தளங்களை பாவிக்கின்ற மாணவர்கள் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்த அறிவினை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கின்ற அதேவேளை கிராமப் புறங்களில் ஊடகங்களின் தொடர்பு இன்றி இருக்கின்ற மாணவர்கள் Covid-19 குறித்த அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.

மேலும் குறித்த ஆய்வு பிரதேசத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகக் காணப்படுவதனால் கொரோனா வைரஸின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் இடம்பெறாத காரணங்களால் Covid-19 தொற்றும் வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றது. பாலினம்இ தொழில்இ வசிக்கும் இடம் என்பன Covid-19 குறித்து மாணவர்களின் அறிவை தீர்மானிப்பதாக காணப்படுகின்றன.

Hussein,R.N, Naquid A,I, etal [2020] என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்து பாலினம்இ தொழில்இ வசிக்கும் இடம் என்பன Covid-19 குறித்து மாணவர்களின் அறிவை தீர்மானிப்பதாக காணப்படுகின்றன. ஆண்களும்இ பதின்மவயதினரும் Covid-19 தொற்றுக்கு முக்கிய காரணமாக அவர்களின் இளம்வயது காணப்படுகின்றது எனக் கூறுகின்றார். இவ் ஆய்வாளரின் கருத்துக்களை குறித்த ஆய்வு பிரதேசத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆய்வாளரின் கருத்துக்களுடன் குறித்த ஆய்வு பிரதேசத கருத்துக்களும் ஒத்து செல்வதனைக் காணலாம். குறித்த ஆய்வு பிரதேசத்தில் உள்ள அதிகளவு மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருவதனால் பெண்கள் அதிகளவு வீட்டை விட்டு வெளிச்செல்வதில்லை. அதேநேரம் ஆண் மாணவர்கள் சமூக வலைத்தளங்களுடனும் சமூகத்தவர்களுடனான அதிகளவு ஆர்வமுடையவர்களாக இருப்பதனால் கொரோனா வைரஸ் குறித்த அதிகளவான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

தொழில் என்று பார்க்கும்போது குறித்த ஆய்வுப்பிரதேசத்தில் மாணவர்களின் பெற்றோர் புரியும் தொழில்களின் அடிப்படையில் Covid-19 குறித்த தொழிலினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அதேபோன்று நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களை விட கொரோனா வைரஸ் தொற்று குறித்த புரிதலினை அதிகளவு கொண்டுள்ளனர்.

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாத பொழுதிலும் தடுப்பூசி குறித்த அச்ச உணவர்வுடையவர்களாக காணப்படுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 89.1மூ ஆன மாணவர்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பதாக கூறியிருப்பதுடன் அவர்களிம்; பெற்றுக்கொள்ளபட்ட கருத்துக்களின் படி முக கவசம் அணிதல் , சுய பரிசோதனை செய்து கொள்ளல், பொது இடங்களுக்கு முக கவசம் அணிந்து செல்லல், கை கழுவுதல், இருமல், தடுமல் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறாது இருத்தல், காச்சல் இருப்பின் வைத்திய சாலைக்கு செல்லுதல், இடைவெளிகளை கடைப்பிடித்தல், கையுறைகளை அணிதல், சட்டதிட்டங்களை பின்பற்றுதல், சுய தனிமைப்படுத்திக்கொள்ளல் என்பன பொதுவான தடுப்பு நடவடிக்கைகளாக குறிப்பிடிருக்க காணலாம். இவை போன்ற ஆய்வுகளின் பெறுபேறுகளும் இவ் ஆய்வின் பெறுபேறுகளுடன் எந்த வகையில் ஒத்ததாகக் காணப்படுகின்றது, எந்த வகையில் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது என்பது தொடர்பாகக் கலந்துரையாடுவதாக உள்னது.

ஆராய்வோம்…

Related posts

சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்

Thumi202121

யாழில் ஒட்டப்பட்ட விசித்திரமான சுவரொட்டி.

Thumi202121

பழந்தமிழரின் அடையாளம் வேல்!

Thumi202121

Leave a Comment