நெதர்லாந்தில் உள்ள Rijksmuseum அருங்காட்சியகங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி இராச்சியத்தை சேர்ந்த ஆறு கலைப்பொருட்கள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானியை நெதர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனோஜா கஸ்தூரியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதில், கண்டி பீரங்கி என அழைக்கப்படும் அலங்கரிக்கப்பட்ட துப்பாக்கி, தங்கம் மற்றும் வெள்ளியிலான வாள்கள், கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் என்பன அந்த கலைப்பொருட்களில் அடங்கும்.

7 நிமிடம் 48 செக்கன்களில் 1550 கிலோ எடைகொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியினால் இழுத்து, தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59வயதான திருச்செல்வம் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார். மேற்படி நிகழ்வு,சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.07.2023) தென்மராட்சி-மட்டுவிலில் இடம்பெற்றது.



விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 05.07.2023 அன்று பறவைகள் கொண்டுவரப்பட்டன.
காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது, இது பெரும்பாலும் “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று பெயரிடப்பட்டுள்ளது. தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பறவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையுமே இவ்வாறு பெறப்பட்டுள்ளன. விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.

