அபயம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்புடன் சிவபூமி மற்றும் துமி அமைப்புக்கள் முன்னெடுக்கும் விழித்தவரெல்லாம் பிழைத்துக்கொள்வர் எனும் செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட பாடசாலைகளின் சமூகநெறிக் கழகங்களின் பொறுப்பாசிரியர்களுடனான கலந்துரையாடல் 22.07.2023 அன்று கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. வைத்தியர் ரஜீவ் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த வைத்தியர் க. பார்த்தீபன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்கள். எதிர்கால திட்டங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கப்பட்டன.
அதன் ஒரு அங்கமாக கிளிநொச்சி றோயல் கல்வி நிலைய மாணவர்களுடனான போதைப்பொருள் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் 23.07.2023 அன்று நடைபெற்றது. பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் கல்வி நிலைய அதிபர் குமார் அவர்களும், வைத்தியர் க. பார்த்தீபன் அவர்களும், துமி உறவுகளும் மாணவர்களுடன் போதைப்பொருட்களின் தீமைகள் சம்பந்தமாகவும், கல்வியின் தேவை சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.



யாழ் மத்திய கல்லூரியில் 06.07.2023 அன்று இடம்பெற்ற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலாநிதி. செஞ்சொற்செல்வர். ஆறு. திருமுருகன் மற்றும் வளவாளராக கலந்து கொண்ட மருத்துவர். திரு. ரஜீவ் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் உள்ளடக்கிய சமூகநெறிக் கழகமும் உருவாக்கப்பட்டது.





