இதழ் 62

யாழில் ஒட்டப்பட்ட விசித்திரமான சுவரொட்டி.

வீதியில் குப்பைகள் கொட்டுவது பொதுவாக நம்மவர்கள் எல்லோரிடமும் உள்ள கெட்ட பழக்கம். அதனால்தான் இங்கே குப்பை போடாதீர்கள் அறிவிப்பு எல்லா வீதிகளிலும் உள்ளது. ஆனாலும் அதை நம்மவர்கள் கண்டுகொள்வதில்லை.

இப்படியானவர்களிற்கு இன்னொரு உத்தியை கடைப்பிடித்துள்ளார் யாழ்ப்பாண வாசியொருவர்.

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது.

அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்” என எழுதப்பட்டுள்ளது அத்துடன் சூனிய பொம்மை மற்றும் இயந்திர தகடும் சேர்த்து வைத்து அப்பகுதி மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

Related posts

சித்திராங்கதா -57

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -06

Thumi202121

நான்காம் கைத்தொழில் புரட்சிக்குள் நுழைந்துவிட்டதா உலகம்?

Thumi202121

Leave a Comment