ஜெருசலேமில் உள்ள ஒரு தேவாலயத்தில் தமிழிலும் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஜெபம்! எந்த தெய்வத்தையும் குறிப்பிடாத பொதுவான ஜெபம் என்பது இதன் கூடுதல் சிறப்பு!
இந்தியாவில் வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் கப்பற்படையில் மிக உயர்ந்ததாகவும், பெருமைக்குரியதாகவும் கருதப்படும் கப்பற்படை நடவடிக்கைகளின் தலைவர் (Chief of Naval Operations) பதவிக்கு இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத ஒரு நிகழ்வாக லிஸா ஃப்ரான்செட்டி எனும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் லிஸா அமெரிக்க படைகளின் கூட்டு தலைவர்களில் (Joint Chiefs of Staffs) இடம் பெறும் முதல் பெண்மணியும் ஆகிறார்.
தற்போது அமெரிக்க கடற்படையின் துணைதலைவராக பணியாற்றும் லிஸா, தனது பணிக்காலத்தில் இதுவரை பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறார். அவரது சாதனைகளுக்காக, பெருமை வாய்ந்த 4 நட்சத்திர குறியீட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் அதிகரித்துள்ளது. வட இத்தாலியில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ பரவியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கடலோர பகுதிகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவை தொட்டிருக்கிறது. வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பாவை போன்றே அமெரிக்காவிலும் வெப்ப அலை கடுமையாக வீசுகிறது. அமெரிக்காவில் பலர், வெப்பம் காரணமாக முன்பகலுக்கு பிறகு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.
இவற்றை தவிர உச்சகட்டமாக சீனாவில் வரலாறு காரணாத வகையில் 52.2 டிகிரி செல்சியஸ் வெயில் போட்டு தாக்குகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
இதில் கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப்பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால பொருட்கள், மத்திய இந்தியாவில் இருந்து 22 கலைப்பொருட்கள், வட இந்தியாவில் இருந்து 6 பொருட்கள் மற்றும் மேற்கு இந்தியாவில் இருந்து 3 கலைப்பொருட்கள் அடங்கும்.
சுமார் 50 கலைப்பொருட்கள் இந்து, ஜெயின் மற்றும் இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைவை என்றும் மீதம் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மணிக்கு 100 km வேகத்தில் புகையிரதங்கள் இயக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 400-KM வேகத்தில் இரயில்களை இயக்கும் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக இயக்கி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது சீனா. CR450 என பெயரிடப்பட்டுள்ள இவ் இரயில்கள் சோதனை ஓட்டத்தின் பொழுது 453km வேகத்தில் இயக்கப்பட்டுள்ளன. பாலங்கள், குகைகள் என அனைத்து பகுதியிலும் எதிரும் புதிருமாகவும் இயக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அத் தருணத்தில் ஒப்பீட்டு வேகம் 891km ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1 comment