இதழ் 62

கடுமையான தண்டனைகள் தேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1 கிலோ 135 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற நாவற்குழி குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி சமீபத்தில் தீர்ப்பளித்தார். பலரது வரவேற்பையும் பெற்றுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பானது போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

2022 இல் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவு,பொலிஸ் நிலை­யங்கள் மற்றும் ஏனைய நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்ட சுற்றி வளைப்­பு­க­ளை­ய­டுத்து ஹெரோயின் 1548 கிலோ கைப்­பற்­றப்­பட்­டது. இந்த ஹெரோயின் தொகை­யுடன் 46,258 சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டனர். இந்த புள்­ளி­வி­ப­ரங்­களை பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்­புப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயினின் பெறு­மதி 2090 கோடி எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. போதைப்­பொ­ரு­ளு­ட­னான குற்­றச்­சாட்­டு­களில் அதா­வது குறிப்­பாக போதைப்­பொருள் பாவ­னை­யு­ட­னான குற்­றச்­சாட்­டுக்­க­ளின்கீழ் 5000 மாண­வர்கள் தடுப்பு நிலை­யங்­களில் இருக்­கி­றார்கள் என மேல­திக சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் ஜெனரல் சந்­தன ஏக்­க­நா­யக்க தெரி­வித்­துள்ளார். இவர்கள் க.பொ.த சாதா­ரண தரம் மற்றும் க.பொ.த உயர்­த­ரப் ­ப­ரீட்­சை­களில் சித்­தி­ய­டைந்­த­வர்­க­ளென்றும் 22 முதல் 30 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளெ­னவும் தெரி­வித்­துள்ள அவர் இவ்­வாறு இளம் தலை­மு­றை­யினர் பெரும் எண்­ணிக்­கையில் போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளமை நாட்டின் எதிர்­கா­லத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது எனவும் அவர் கூறி­யுள்ளார்.

1970 தொடக்கம் 1980வரை சிங்கப்பூர் போதைப்பொருள் பாவனை, கடத்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய குற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட போதும் 1973ம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, இன்று போதைப்பொருள் பாவனை மிகவும் குறைந்த நாடாக சிங்கப்பூர் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன் உலக பொருளாதாரத்திலும் முக்கிய இடம் வகிக்கின்றது. போதைப்பொருள் தொடர்பான சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் இன்றைய சிங்கப்பூரின் முன்னேற்றமடைந்த பொருளாதார நிலைக்கு இவ்வாறான கடுமையான சட்டங்களே அடித்தளம் இட்டன. அது போன்ற சட்டங்கள் எமது நாட்டிலும் அமுல்ப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால்த்தான் போதைப்பொருளை வேரோடு களைய முடியும்.

குற்றவாளிகளையும் பாதுகாத்து, பொதுமக்களையும் சமரசப்படுத்தும் தீர்ப்புகளால் பயனில்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகள் சிறைச்சாலையில் இருந்துவிட்டு வருவது தடுக்கப்பட வேண்டுமென அண்மையில் பாராளுமன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவாதங்கள் அப்படியே நீர்த்துப் போகாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து, போதைப்பொருள் கடத்தல்‌ மற்றும் விற்பனை‌ செய்தல் போன்ற குற்றங்களுக்கு, குற்றவாளிகள் அச்சப்படும் வகையில் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தண்டனைகள் கடுமையானால்த்தான் குற்றங்கள் குறையும்

Related posts

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா!

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -06

Thumi202121

நான்காம் கைத்தொழில் புரட்சிக்குள் நுழைந்துவிட்டதா உலகம்?

Thumi202121

Leave a Comment