இதழ் 63

நோம் ஷோம்ஸ்கி (Noam Chomsky)

நோம் ஷோம்ஸ்கி நவீன மொழியியலின் தந்தை{Father of modern linguistic} என அழைக்கப்பட்டார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மொழி மெய்யியலாளர் ஆவார். 1950 -1960 வரையிலான காலப்பகுதியினைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்கின்னரின் கற்றல் கொள்கையினை மறுத்துப் புதியதொரு கருத்தினைத் தெரிவித்த ஒரு மொழியியலாளராகப் பார்க்கப்பட்டார். அதுமட்டுமன்றி பகுப்பாய்வு மெய்யியலில் மொழியின் தெளிவின்மை மற்றும் தவறுதலான எடுத்துரைப்புக்கள் பற்றிய கருத்துக்கள்; காணப்பட்டது. இதனடிப்படையில் மொழியினை தெளிவுபடுத்தும் நோக்கில் எழுந்ததே பகுப்பாய்வு மெய்யியலாகும். இந்தவகையில் பகுப்பாய்வுச் சிந்தனையாளர்களுள் இவரையும் ஒருவராக பார்க்க முடியும்.

ஷோம்ஸ்கி இருவகையான மொழிசார் கருத்துநிலைகளைக் கொண்டு காணப்பட்டார். மனிதர்கள் எந்தவொரு மொழியையும் கற்க உதவும் ஒரு உள்ளார்ந்த மொழி சாதனத்துடன் பிறக்கிறார்கள் (Chomskys theory of language acquisition) என்பது ஒன்று. மற்றையது உலகளாவிய இலக்கணக்கோட்பாடு(Universal grammar) ஆகும். ஷோம்ஸ்கியின் இவ்விரு மொழிசார் கருத்துநிலைகளை தெளிவாக நோக்குவது அவசியமானது.

மனிதர்கள் எந்தவொரு மொழியையும் கற்க உதவும் ஒரு உள்ளார்ந்த மொழி சாதனத்துடன் பிறக்கிறார்கள் என்பது நோம் ஷோம்ஸ்கியின் கருத்தாகும். இவருடைய கருத்துப்படி மனிதனது மூளையின் கட்டமைப்புக்கள் இயற்கையாகவே மொழியினைக் கற்கும் மற்றும் மொழியினைப் பயன்படுத்தும் திறனை அனுமதிக்கிறது. இக்கருத்து நிலையினை 1950களின் முற்பகுதியிலிருந்து வெளிடத்தொடங்கியுள்ளார். LAD (Language Acquisition Device) எனும் மொழியைக் கையகப்படுத்தும் சாதனம் மூளையில் இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். மனிதர்கள் LAD மூலமே மொழியினை கற்கும் உள்ளார்ந்த திறனை குழந்தைப்பருவத்திலிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள் என ஷோம்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். மனிதனது ஆரம்ப வளர்ச்சி நிலைகளில் ஒன்றான குழந்தைப் பருவத்திலே குழந்தைகள் அவதானித்தல்இ சத்தம் போடுதல்இ சிரித்தல்இ அழுதல் போன்றவற்றின் மூலம் இயல்பாகவே மொழியியல் ரீதியாக வளர்கிறார்கள் என்றார். இக்குழந்தைப் பருவத்தில் சுற்றுச்சூழல் தூண்டுதல்களால் குழந்தைகளது மொழியியல் ரீதியான உள்ளார்ந்த அம்சம் செயற்படுகிறது என வாதாடினார்.

ஆரம்பத்தில் மேற்கூறியது போல் தமது மொழியியலினை கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வளர்ந்து வரும் காலப்பகுதிகளில் சொற்கள்இ சொற்றொடர்களைக் கற்று செய்திகளைத் தெரிவிக்கும் திறனையும் வெளிப்படுத்துகிறார்கள். குழந்தைகள் வளரும் சூழலின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக இது நிகழ்கிறது என்பதே ஷோம்ஸ்கியின் சிந்தனைப்போக்காகும்.

எடுத்துக்காட்டாகஇ ஜேர்மன் இனத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை அமெரிக்காவில் வளர்க்கப்பட்டு அங்கு ஆங்கிலம் பேசும் மக்களால் சூழப்பட்டிருந்தால் அந்தக் குழந்தையும் ஆங்கிலத்தில் பேசும். இதற்குக் காரணம் LAD சாதனமே ஆகும். இந்தவகையில் LAD சாதனம் மூலம் எந்தமொழியையும் கற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பேசும் பெற்றோருக்கு ஆங்கில தேசம் ஒன்றில் குழந்தை பிறந்து அந்நாட்டிலே வசிக்குமானால் அக்குழந்தை ஆங்கிலம் பேசக்கூடியதாகவும் அதே சமயம் பெற்றோரால் தமிழ் கற்பிக்கப்பட்டால் தமிழும் பேசக்கூடியதாயும் உள்ளமையினை நடைமுறையில் காண்கின்றோம்.
ஷோம்ஸ்கியின் சிந்தனைப்படி ஒருவர் ஒரு மொழியினை மட்டும்தான் கற்றுக்கொள்ளக் கூடியவரல்ல. மாறாக ஒரு நபரால் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள முடியும். இச்செயன்முறை இயற்கையாகவே மனிதனிடம் காணப்படும் ஒரு அம்சமாகவே காணப்படுகிறது என்ற முடிவிற்கு வரக்கூடியதாகவுள்ளது.

உலகளாவிய இலக்கணக் கோட்பாட்டில் (Universal grammar) ஷோம்ஸ்கி அனைத்து மொழிகளும் அதற்கென தனித்துவமான கட்டமைப்புக்கள் மற்றும் விதிகளைக் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாகஇ பெயர்ச் சொற்கள்இ வினைச்சொற்கள் மற்றும் உரிச்சொற்கள் என சொற்களின் வகுப்புக்கள் உள்ளமையினைக் குறிப்பிடலாம். ஷோம்ஸ்கிஇ ஒர் ஆங்கிலக் குழந்தை ஆங்கிலத்தை அறிந்து கொண்டுதான் பிறக்கிறது என்பதல்ல. மாறாக அனைத்து மானிட மொழிகளும் பொது இலக்கணக் கோட்பாடுகளை தமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தவகையில் அனைத்து மொழிகளும் பொருட்கள் மற்றும் செயல்களைக் குறிப்பிட பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச் சொற்கள் கொண்டுள்ளன எனவும் மொழிக் கற்றலில் குழந்தையின் பணி தான் கேட்டறியும் குறிப்பிட்ட மொழி இத்தகைய அடிப்படைக் கோட்பாடுகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை நிறுவுதலே என்றும் எடுத்துரைக்கிறார்.

மொழியின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முயல்பவர்கள் பலவழிகளில் அதாவது கிடைத்திடக்கூடிய பல மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். இக்கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் மொழி இலக்கணம்இ விதிகளுக்கான திட்டவட்டமான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அது கணக்கிலடங்காத ஆழ்ந்த மற்றும் மேற்புறக் கட்டமைப்புக்களுடன் பொருத்தமாக தொடர்புபடுத்தப்பட்டிருப்பதும் புலனாகும். ஓவ்வொரு மனிதனும் வெவ்வேறுபட்ட பண்பாடுகளையும்இ நுண்ணறிவுகளையும் கொண்டி ருந்தாலும் கூட அது மொழிகளின் கட்டமைப்புக்களைப் பாதிப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மொழியின் விதிமுறைகளும் பொதுவானவையாக கருதப்பட்டுள்ளது.

நோம்ஷோம்ஸ்கியின் மொழியியல் தொடர்பான கருத்தியல்கள் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஷோம்ஸ்கியின் மொழி தொடர்பான ஆய்வுகள் கருத்தியல் நிலையிலே காணப்பட்டன. விஞ்ஞானிகள்இ உளவியலாளர்கள் போன்று பரிசோதனைகளை மேற்கொண்டு தன்னுடைய ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்திக்காட்டவில்லை. குறிப்பாக ஷோம்ஸ்கி குழந்தைகளை வைத்து ஆய்வு எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது இவருடைய சிந்தனையை உறுதி செய்து கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஷோம்ஸ்கியின் கோட்பாட்டில் குழந்தை மொழியினைப் பயன்படுத்தி பேசுகிறது என்பது பற்றிய கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர குழந்தை ஏன் பேச விரும்புகின்றது என்பதற்கான காரணங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

அனைத்து மொழிகளுக்கும் பொதுவான இலக்கணக்கோட்பாடு உள்ளது என்பதனை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் உலகில் பல்வேறு மொழிகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரேவகையினதான விதிமுறைகள் மற்றும் இலக்கணக் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன என்பதனைக் கூறமுடியாது. எடுத்துக்காட்டாகஇ மேலைத்தேய மொழிகளிற்கு பொதுவான இலக்கணக்கோட்பாடு உண்டு என்பது ஓரளவு பொருத்தமுடையதாகவும் வேறு மொழிகளில் இக்கோட்பாட்டைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பதுவதனை குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி குழந்தைகள் ஒரு மொழியைக் கற்பது பற்றி ஷோம்ஸ்கியின் கோட்பாடு கூறிநிற்கிறதே ஒழிய இரண்டாவது மொழியைக் கற்பது பற்றி ஏதும் கூறவில்லை. மொழியொன்றைக் கற்பதில் ஒத்த கூறுகள் உள்ளடங்கியுள்ளன என்ற கருத்தை பொதுவாக நோம்ஷோம்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ஸ்கின்னர் தன்னுடைய கற்றல் கோட்பாட்டினை நிறுவிக்காட்டுவதற்கு விலங்கில் பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் ஷோம்ஸ்கி எந்நவிதமான நிரூபணங்களையும் எடுத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஸ்கின்னரின் கற்றல்கொள்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. ஷோம்ஸ்கியின் மொழியியல் ரீதியான சிந்தனைப் போக்கினை ஏற்றுக்கொள்வதில் முறையான நிரூபணங்கள் இல்லாமையினால் சிரமங்கள் உள்ளமையினைப் புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.

Related posts

வினோத உலகம் – 28

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -07

Thumi202121

வெற்றிகரமாக நடைபெற்ற பயிற்சிப்பட்டறை

Thumi202121

Leave a Comment